ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்டால் அமெ­ரிக்கா முகங்­கொ­டுத்­துள்ள அச்­சு­றுத்­தல்­களை முறி­ய­டிப்பேன்

அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக தான் தெரிவு செய்­யப்­பட்டால் அமெ­ரிக்கா முகங்­கொ­டுத்­துள்ள பல்­வேறு அச்­சு­றுத்­தல்­க­ளையும் எதிர்­கொண்டு முறி­ய­டிக்கப் போவ­தாக டொனால்ட் டிரம்ப் சூளு­ரைத்­துள்ளார்.

கிளேவ்­லாண்ட்டில் குடி­ய­ரசுக் கட்­சி­யின் ஜனா­தி­பதி வேட்­பாளர் நிய­ம­னத்தை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கையேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

“தற்­போது எமது நாட்டை துன்­பு­றுத்தி வரும் குற்­றச்­செ­யல்­களும் வன்­மு­றை­களும் விரைவில் முடி­வுக்கு கொண்டு வரப்­படும்” என அவர் தெரி­வித்தார்.

தனது ஜனா­தி­பதி பத­வி­யா­னது அமெ­ரிக்­காவும் சாதா­ரண மக்­களும் புதிய சகாப்­த­மொன்­றுக்குள் பிர­வே­சிப்­பதற்கு கட்­டியம் கூறு­வ­தாக அமையும் என அவர் கூறினார்.

குடி­ய­ரசுக் கட்சி செனட்­சபை உறுப்­பி­ன­ரான ரெட் குரூஸ் டொனால்ட் டிரம்ப்­பிற்கு ஆத­ர­வ­ளிக்க மறுத்­த­மைக்கு மறு­நாளே அவ­ரது இந்த உரை இடம்­பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. ரெட் குரூஸ் குடி­ய­ரசுக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் தெரி­வுக்­கான வாக்­கெ­டுப்பில் டொனால்ட் டிரம்ப்பின் முக்­கிய போட்­டி­யா­ள­ராக விளங்­கி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.

அதே­ச­மயம் டொனால்ட் டிரம்பின் ஜனா­தி­பதி வேட்­பாளர் நிய­ம­னத்­திற்கு எதிர்ப்புத் தெரி­விக்கும் வகையில் முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ் மற்றும் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் உள்­ள­டங்­க­லான ஏனைய சிரேஷ்ட குடி­ய­ரசுக் கட்சி உறுப்­பி­னர்கள் அந்த நிகழ்வில் பங்­கு­பற்­றாது பகிஷ்­க­ரிப்புச் செய்­தி­ருந்­தனர்.

இந்­நி­லையில் ஒரு மணி நேரத்­துக்கும் அதி­க­மான நேரம் உரை­யாற்­றிய டொனால்ட் டிரம்ப், இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­திகள், ஆவ­ணப்­ப­டுத்­தப்­ப­டாத குடி­யேற்­ற­வா­சிகள் மற்றும் வாணிப உடன்­ப­டிக்­கைகள் என்­ப­வற்றால் நாட்டின் பாது­காப்பு அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளா­கி­யுள்­ள­தாக கூறினார்.

“நாம் எமது நாட்டில் பாது­காப்பு, சுபீட்சம் மற்றும் சமா­தா­னத்தை மீள ஏற்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. எமது நாடு தயா­ள­முள்­ளதும் இத­மா­ன­து­மான நாடாக இருக்­கலாம். ஆனால் அதே­ச­மயம் இந்த நாடு சட்டம் ஒழுங்­கு­டைய நாடா­கவும் இருக்கும்” என அவர் தெரி­வித்தார்.

“கட­மை­யுடன் பணி­யாற்றி தமக்­கென குரல் கொடுக்­கா­துள்ள மறக்­கப்­பட்ட அமெ­ரிக்­கர்­க­ளுக்கு, நான் உங்­களின் குர­லாக இருக்­கிறேன்” என டொனால்ட் டிரம்ப் கூறினார்.

அவர் தனது உரையின் போது ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் ஜன­நா­யகக் கட்­சியைச் சேர்ந்த போட்டி வேட்­பாளர் ஹிலாரி கிளின்­ட­னுக்கு எதி­ரான கருத்­து­களை முன்­வைத்தார்.

முன்னாள் இரா­ஜாங்கச் செய­லா­ள­ரான ஹிலாரி கிளின்டன் நாட்டை மர­ணா­பத்­தா­னதும் குழப்­ப­க­ர­மா­னதும் பல­வீ­ன­மா­ன­து­மான நிலைக்கு இட்டுச் சென்­றுள்­ள­தாக அவர் குற்­றஞ்­சாட்­டினார்.

அமெரிக்காவிற்கு முதலிடம் கொடுப்பதாக தனது திட்டங்கள் உள்ளதாக குறிப்பிட்ட டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவுக்குள் சட்டவிரோத குடியேற் றவாசிகளும் குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களும் போதைவஸ்துக் கடத்தல்காரர்களும் வருவதைத் தடுக்க பாரிய சுவரை எழுப்பப் போவ தாக தெரிவித்தார்


Related News

 • சாஸ்கட்சுவானில் வாகன சாரதிகளிடம் போதை மருந்து சோதனை செய்யும் 15 இயந்திரங்கள் அறிமுகம்
 • கனேடிய மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
 • இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தலை கையாள்வதற்கு சிங்கப்பூரும் கனடாவும் இணக்கம்
 • தென்கிழக்காசிய நாடுகளுடன் தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்ள கனடா விரும்பம்
 • பிரதமர் ட்ரூடோவின் எளிமையான சிங்கப்பூர் சுற்றுப் பயணம்
 • கனடாவில் அசாதாரண காலநிலை நீடிப்பு
 • குழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளது – புள்ளிவிபரம்
 • மூன்று திருடர்களை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *