டிரம்புக்கு எதிராக முன்னாள் உளவுத்துறை இயக்குநர் சாட்சியம்!

James-Comey-details-Trumps-lies-and-reaffirms-beliefரஷிய தொடர்பு விவகாரத்தில் டிரம்ப் அழுத்தம் தந்தார் என்று அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் கோமி சாட்சியம் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, இன்றுவரை அங்கு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெறவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக களம்கண்ட ஹிலாரி கிளிண்டன் தோல்வியைத் தழுவவும் ரஷியா தலையிட்டது என்று கூறப்படுகிறது.

இதுபற்றி அமெரிக்க பாராளுமன்றம் ஆய்வு செய்து வருகிறது. மேலும், இது தொடர்பாக அமெரிக்க உளவு அமைப்பான எப்.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணையை நடத்தி வந்த எப்.பி.ஐ.யின் இயக்குனர் ஜேம்ஸ் கோமியை ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக பதவி நீக்கம் செய்தார்.

ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் பிரசாரத்துக்கும், ரஷியாவுக்கும் இடையே தொடர்பு இருந்தது என்பது தொடர்பான விவகாரத்தில் எப்.பி.ஐ. விசாரணை நடத்துவதுதான் ஜேம்ஸ் கோமி பதவி நீக்கத்துக்கு காரணம் என்று எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி குற்றம் சாட்டுகிறது.

இந்த நிலையில் தனது பதவி நீக்கம் தொடர்பான அமெரிக்க பாராளுமன்ற செனட் சபையின் விசாரணையின்போது, ஜேம்ஸ் கோமி பரபரப்பு வாக்குமூலம் (சாட்சியம்) அளித்துள்ளார்.

அமெரிக்காவை அதிர வைத்துள்ள அந்த வாக்கு மூலத்தில் அவர், “எனக்கு விசுவாசம் தேவை. நான் விசுவாசத்தை எதிர்பார்க்கிறேன் என்று டிரம்ப் என்னிடம் கூறினார்” என குறிப்பிட்டுள்ளார்.

டிரம்புக்கு தான் அப்போது அளித்த பதிலில், நீங்கள் என்னிடம் எப்போதும் நேர்மையை எதிர்பார்க்கலாம் என்று சொன்னேன் என குறிப்பிட்டுள்ளார்.

Share This Post

Post Comment