ஏர்செல் பயனர்கள் பயன்படுத்தாத பேலன்ஸ்-ஐ திரும்ப வழங்க டிராய் உத்தரவு

ekuruvi-aiya8-X3

aircel-25மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஏர்செல் பயனர்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்த பேலன்ஸ் தொகையை அவர்களுக்கு திரும்ப வழங்க உத்தரவிட்டுள்ளது.

ஏர்செல் பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்கள் தொடர்ச்சியாக வைத்த குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் பயன்படுத்தாத தொகை, பாதுகாப்பு முன்பணம் ஆகியவற்றை அவர்களுக்கு திரும்ப வழங்க ஏர்செல் நிறுவனத்திற்கு டிராய் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிகாம் வாடிக்கையாளர்களின் நலம் கருதி பயன்படுத்தாத பேலன்ஸ் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களின் பாதுகாப்பு முன்பணம் ஆகியவற்றை திரும்ப வழங்கவும், இதுகுறித்த விரிவான அறிக்கையை மே 10-ம் தேதிக்குள் சமர்பிக்க டிராய் உத்தரவிட்டுள்ளது.

ஏர்செல் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருக்கும் அறிக்கையில் பாதுகாப்பு முன்பணம் வெற்றிகரமாக திரும்ப வழங்கப்பட்டிருக்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, தொகையை திரும்ப பெறாத வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, திரும்ப வழங்கப்படாத தொகை உள்ளிட்டவற்றை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் டிசம்பர் 1, 2017 முதல் மார்ச் 10, 2018 வரையிலான காலகட்டத்தில் ஏர்செல் நிறுவனத்தில் இருந்து மற்ற நிறுவனங்களுக்கு போர்ட் அவுட் செய்த அனைத்து பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் விவரம், அவர்கள் பயன்படுத்தாமல் தங்களது கணக்கில் வைத்திருக்கும் பேலன்ஸ் தொகை, அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை உள்ளிட்டவற்றையும் அறிக்கையில் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்துடன் மார்ச் 10, 2018-க்குள் மற்ற நெட்வொர்க்-களுக்கு போர்ட் அவுட் செய்யாத பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு பேலன்ஸ் தொகையை வழங்க டிராய் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஏர்செல் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கக் கோரி ஏர்செல் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

ஏர்செல் வாடிக்கையாளர்கள் போர்ட் அவுட் செய்திருக்கும் நெட்வொர்க் ஆப்பரேட்டர்கள் ஏர்செல் வழங்கும் பேலன்ஸ் தொகையை வாடிக்கையாளர்களின் கணக்கில் சேர்த்து, அதனை குறுந்தகவல் மூலம் தெரிவிக்கவும் டிராய் உத்தரவிட்டுள்ளது.

இந்திய டெலிகாம் சந்தையில் கடுமையான போட்டி காரணமாக கடுமையான இழப்புகளை சந்தித்த ஏர்செல் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு சீரான சேவையை வழங்க முடியாமல் போனது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், டிராய் வெளியிட்டிருக்கும் புதிய உத்தரவு வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

Share This Post

Post Comment