உப்புமா மூலம் ரூ.1.29 கோடி கடத்த முயற்சி

ekuruvi-aiya8-X3

uppumaபுனே விமான நிலையத்தில், உப்புமா மூலம், 1.29 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை கடத்த முயன்ற இரண்டு பேர் சிக்கினர்.

மகாராஷ்டிரா மாநிலம், புனே விமான நிலையத்தில், கடந்த, 6ம் தேதி குடியேற்ற அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாய் செல்வதற்காக வந்த நிஷாந்த் ஒய் என்பவர் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இது குறித்து சுங்க வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பந்தப்பட்ட நபரின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில் ஒரு ‘ஹாட் பாக்சில்’ சுடச்சுட உப்புமா இருந்தது. ஆனால், வழக்கமான எடையை விட கூடுதல் எடையுடன் ஹாட் பாக்ஸ் இருந்ததால் சந்தேகம் ஏற்பட்டது. தீவிரமாக சோதித்த போது, அந்த ஹாட் பாக்சில் கறுப்பு நிற பாலிதீன் கவரில், 86,000 அமெரிக்க டாலர், 15,000 யூரோ கரன்சிகள் இருந்தன.

தொடர்ந்து, எச்.ரங்க்லானி என்ற பெண் துபாய் செல்ல வந்தார். அவரது உடைமைகளை சோதித்த போது உள்ளே ஹாட் பாக்சில் சுடச்சுட உப்புமா இருந்தது. அதன் கீழே கவரில், 86,200 அமெரிக்க டாலர், 15,000 யுரோ கரன்சிகள் இருந்தது. பிடிப்பட்ட வெளிநாட்டு கரன்சிகளின் மொத்த மதிப்பு, 1.29 கோடி ரூபாய். பிடிபட்ட இரண்டு பேருக்கும் தொடர்பு ஏதும் உள்ளதா என சுங்கவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Post

Post Comment