ஒரு டொரோண்டோ தமிழ் பெண்ணின் கதை . . .

eகுருவி பத்திரிகைக்காக

எழுதியவர் – Jenny Starke

தமிழில் – இலங்கதாஸ் பத்மநாதன்

எனக்கு ஐந்தாவது வயதில் இருந்து ஆரம்பமாகின்றது எனது ஆரம்பகால நினைவுகள். நடுநிசி நேரத்தில் எத்தவித சத்தமும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் அவதானமாய்  படிக்கட்டுகளில் என்னையும் தூக்கிக் கொண்டு அவர் செல்வது மட்டுமே என் நினைவில் உள்ளது. வரவேற்பறையில் உள்ள இருக்கைக்கு என்னைத் தூக்கிச் சென்று தன்மீது என்னைப் படுக்க வைத்துவிட்டு, பாண் துண்டு போன்ற எதையோ மென்று கொண்டிருந்தார். சில வினாடிகளில் அவர் மென்று கொண்டிருந்த அந்த பாண் துண்டை  என் தொண்டைக்குள் தள்ள கட்டாயப்படுத்தினார். இது மட்டுமே எனக்குத் தெளிவாக நினைவிருக்கின்றது. அதன் பின்னர் என்ன நடந்தது என்பது எனக்கு நினைவில்லை.

ஒரு குழந்தையாக எனக்கு நடந்த பாலியல் துஷ்பிரயோகத்தை மறப்பது எளிதாக இருந்திருக்கின்றது. இது ஒரு வரமா அல்லது சாபமா என உண்மையாகவே எனக்குத் தெரியவில்லை. குழப்பம், கோபம், அவமானம் மற்றும் மறுத்தல் ஆகியனவே எனது குழந்தைப் பருவமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் அவரைப் பார்க்கும்போதோ அல்லது அவர் பற்றி நினைக்கும்போதோ ஒருவித கோபம் மற்றும் அச்சத்திற்கு இடையே எனது உடல் சிக்கிக் கொண்டுள்ளதாக எனக்குத் தோன்றும்.

abuse

எனக்கு என்ன நேர்ந்து கொண்டிருக்கின்றது என்பதைக் கண்டறியவே பல வருடங்கள் கடந்தன.

எனக்கு 17 வயதாக இருக்கும்போது அதுவரை காலமும் அதுபோல் நான் அடிவாங்கியதே இல்லை என்பதைப் போல் என்னை காட்டுமிராண்டித்தனமாக அவர் அடித்தார்.  அவர் என்னை அடிக்கும்போது நான் எதுவும் பேசமாட்டேன். மேலும் மோசமாக அடிவாங்காமல் இருக்க நான் அமைதியாக உட்கார்ந்து கொள்வேன்.

அந்தத் தருணத்தில், அவ ரை நிறுத்தச் சொல்லும் அளவிற்கு எப்படியோ தைரியத்தை வரவ‌ளைத்தேன். என்னைத் தொட உங்களுக்கு உரிமையில்லை எனத் தெரிவித்தேன். எனது அம்மாவின் கண்கள் அதிர்ச்சியில் உறைந்திருந்ததைக் கண்டேன். என்னால் அம்மாவிடம் எதுவும் கூற முடியவில்லை – நான் ஏதேனும் கூறினால் அது எந்தவிதமான எதிர்வினைகளை ஏற்படுத்துமோ என்ற பயம் எனக்கு. என் சகோதரன் என்னை வேறோரு அறைக்கு அழைத்துச் சென்றார். எனக்கு என்ன நடந்தது என்பதைக் கூற எனக்கு தமிழில் தகுந்த வார்த்தைகள் தெரிந்திருக்கவில்லை. எனக்கு நடந்ததை ஆங்கிலத்திலும் சொல்லத் தெரியவில்லை. ஆனாலும் எனது சகோதரனிடம் நான் நடந்தவற்றைக் கூறினேன். அன்று எனது சகோதரனின் கண்களில் கண்

ணீரைப் பார்த்தேன், அந்தக் கணம் முதல்    அவரது வாழ்க்கையும் மாறியது என்பது மாத்திரம் எனக்கு நன்றாகத் தெரிந்தது.

எனது காயங்களில் இருந்து வடியும் இரத்தத்தை துடைத்துக் கொண்டும் எனது காயங்களுக்கு மருந்திட்டுக் கொண்டும் இருந்தபோது எனது அம்மா எனதறையில் என்னை அணுகினார். நடப்பவை அனைத்தும் உண்மைதான் என அவரால் நம்ப முடியவில்லை. அவர் சிரித்தார், எனக்கு கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது என்னால் எதுவும் கூறவோ அல்லது செய்யவோ முடியவில்லை.

அன்றிரவு நான் கூறியது உண்மை தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள எனது அம்மா என்னை அவர்களது படுக்கையறைக்கு அழைத்தார். அவர் அனைத்தையும் மறுத்தார். எனது வாழ்வின் மிக மோசமான காலகட்டம் முடிந்துவிட்டது என்று அன்று நான் நினைத்தேன்.

நாட்கள் கடந்து செல்லச் செல்ல, இதுவரை காலமும் இந்த விடயத்தை நான் ஏன் தன்னிடம் தெரிவிக்கவில்லை எனவும் உண்மையில் அவர் எனக்கு என்ன செய்தார் எனவும் என் அம்மா கேட்டுக்கொண்டே இருந்தார். இந்த விடயம்  குறித்து நான் அவரிடம் முன்னரே கூறியிருந்தால் என்னை பாதுகாத்திருப்பேன் எனவும் அதனைத் தடுத்திருக்க முடியும் எனவும் அம்மா கூறினார். எனது அம்மாவிடமிருந்து இப்படியொரு பதில் வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு த் தோன்றியதெல்லாம் கோபம், அருவருப்பு மற்றும் சீற்றம். என்னை எனது அம்மாவால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் ஒரு கு

A little girl poses for photographs to illustrate the topic of child abuse in Canberra, Monday, Oct. 28, 2013. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING

ழந்தை என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. இது எனக்குள் ஏற்கனவே இருந்த குற்ற உணர்வு மற்றும் அவமானத்தை அதிகரித்தது. தற்கொலை செய்துகொள்ள எனது மனம் துடித்தது.

சில மாதங்களுக்கு பின்னர் நான்  இளங்கலை மாணவியாக இருந்தபோது மனநல ஆலோசனை பெற்றுக் கொண்டேன். பழைய நினைவுகளுடன் நீண்ட நாட்கள் என்னால் வாழ முடியாது என்பது எனக்குத் தெரியும். ஒரு பொய்யான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்ததனால் மெதுவாக நான் பைத்தியமாகிக் கொண்டிருப்பதைப் போல் உணர்ந்தேன். அந்தக் காலகட்டத்தில் வீட்டிலிருந்து வெளியேறிச் செல்ல எனது அம்மாவின் அனுமதியை நான்  கோராத நாள் இல்லை. ஆனால் அவர் அதற்கு என்னை அனுமதிக்கவில்லை. நான் வீட்டைவிட்டு வெளியேறிச் சென்றால் தான் தற்கொலை செய்ய நேரிடும் எனவும் அவர் என்னிடம் கூறினார். தன்னால் அவருடன் வாழ முடியும் என்றால் என்னாலும் வாழ முடியும் என்பது அவரது கூற்றாக இருந்தது.

அதன் பின்னர் சில வருடங்கள், எதுவுமே நடக்காததுபோல் அனைவரும் பாசாங்கு செய்து கொண்டனர். ஆனாலும் எதுவுமே மாறவில்லை. நான் வெளிப்படுத்திய காட்டுமிராண்டியாக அவர் இல்லை. அவர் எங்களுக்கு தந்தையாக, எனது தாய்க்கு கணவராக, மீண்டும் எங்களது குடும்பத்தில் ஒருவரானார். இது என்னை மிகவும் ஆத்திரமடையச் செய்தது. சிலசமயம் நானும் எதுவுமே நடக்காதது போல் இருந்தேன். ஏனெனில் எனக்குத் தேவைப்பட்டது ஒரு ஒற்றுமையான குடும்பம்தான்.

ஆனாலும் இந்த விடயம் ஒரு கத்தியாக எனது இதயத்தை மேலும் மேலும் கிழித்துக் கொண்டிருந்தது போன்ற உணர்வு தொடர்ந்தது.

நான் வீட்டை விட்டு வெளியேறியபோது எனக்கு வயது 19. நான் மீண்டும் திரும்பி வீட்டுக்கு வரவேண்டும் என எனது குடும்பம் வலியுறுத்தியது. ஒரு நல்ல குடும்பம் என்ற பெயர் இழக்கப்படுமோ என அவர்கள் பயந்தார்கள். தனது குடும்பத்தின் ஆதரவில்லாமல் ஒரு 19 வயது தமிழ் பெண் தனியே வாழ்கிறாள் என்பதை தமிழ்ச் சமூகம் ஏற்குமா? அவ்வாறானதொரு பெண் குறித்து தமிழ் சமூகம் எவ்வாறு சிந்திக்கும்?

குழந்தைப் பருவத்தில் எனக்கு நேர்ந்த பாலியல் துஷ்பிரயோகம் எனது வாழ்வின் பல தருணங்களைத் திருடிக் கொண்டது. அதில் பிரதானமானது ஒரு தமிழ் பெண் என்கின்ற அடையாளம் தான். நான் வீட்டில் இருந்து   வெளி‌‌யேறிய பின்னர் எனது குடும்பம் மட்டுமல்லாது எனது சொந்தங்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் உட்பட எனது தமிழ்ச் சமூகமே என்னை விலக்கி வைத்தது. எனக்கு தேவையான நேரத்தில் அவர்கள் எனதருகில் இருக்கவில்லை என்பதுதான் உண்மை. அப்போது நான் மிகவும் காயப்பட்டேன். கைவிடப்பட்டது போல் உணர்ந்தேன்.

எனது சொந்த குடும்பத்திலிருந்து நான் வெளியேறியபோது தமிழ் சமூகத்தின் துரோகம் மற்றும் ஆதரவு கொடுக்காத நிலையை நான் தூற்றினேன் என்பதை பதிவு செய்ய நான் அவமானப்படவில்லை. ஆனால் தமிழ் சமூகத்தின் அந்த முடிவு ஒரு தமிழ் பெண்ணாக எனது அடையாளத்தை நான் சந்தேகப்பட்டதற்காக அவமானம் கொள்கிறேன். நான் எதிர்கொண்ட காயம் எனக்கு இரக்கத்தைவிட வெறுப்பை வெளிக்காட்ட எளிதாக்கியது, எனது கடைசிப் பெயர் ஜெர்மனாக இருக்கலாம். ஆனால் ஒரு தமிழ் பெண்ணாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். அதை யாராலும் என்னிடமிருந்து பறித்தெடுக்க முடியாது.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானால் முதலில் நீங்கள் இழப்பது உங்கள் குரலைத் தான் என கூறுவார்கள். ஆனால் இனியும் யாராலும் என்னை அமைதியாக்க முடியாது. மீண்டும் துஷ்பிரயோகிக்கவும் முடியாது. எனது அவமானகரமான குடும்பத்தை என்னால் பொய் சொல்லி நல்ல குடும்பமாக்கவும் முடியாது. இதுவே எனது உண்மை – எனது கதை.

எனது கதையில் பல படிமானங்கள் உள்ளன. இருப்பினும் எனது கதையின் இந்த குறிப்பிட்ட பகுதி நான் இப்பொது இருக்கும் இடத்திற்கு என்னைக் கொண்டுவர வும் என்னை தைரியமாக பல முடிவுகளை எடுக்கவும் செய்திருக்கின்றது. இதிலிருந்து நீங்கள் புரிந்துகொள்ளவேண்டியது, இது எனது கதையின் ஒரு பகுதி மட்டுமே என்பதைத் தான்.

Yoga-Ad-ek-piceஇத்தகைய பிரச்சனைகள் எப்போதும் மறைத்து வைக்கப்பட்டிருக்கக் கூடாது. இதனை ஒரு இரகசியமாக வைத்திருக்கக்கூடாது. எவரும் அமைதியில் துன்புறுவது ஏற்றுக்கொ ள்ளத் தக்கதல்ல. எவ்விதமான புறக்காரணிகள் இருந்தாலும் குழந்தைப் பருவத்தில் ஒரு குழந்தைக்கு நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு அ ந்தக் குழந்தை எ ந்த விதத்திலும் பொறுப்பாகாது. அந்தக் குற்றமும் அதற்கான பொறுப்பும் முழுக்க முழுக்க அந்தக் கொடுமையை செய்தவரையே சாரும்.

குழந்தைப் பருவ பாலியல் கொடுமை பற்றிய விழிப்புணர்வும் கல்வியும்    எமது சமூகத்திற்குத் தேவை. மூன்று பெண் குழந்தைகளில் ஒருவர் மற்றும் ஆறு ஆண் குழந்தைகளில் ஒருவர் தேவையற்ற பாலியல் தொல்லைகளை 18 வயதாகும் முன்னரே அனுபவிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இத்தகைய பாலியல் செயல்கள் இந்தக் குழந்தைகளுக்கு நன்கறிந்தவர்களால் அல்லது நம்பிக்கைக்கு உரித்தானவர்களினால் தான் மேற்கொள்ளப்படுகின்றது என்பதாவது உங்களுக்குத் தெரியுமா?

தங்களது குழந்தைப் பருவத்தில் பாலியல் வன்கொடுமைகளை தங்களுக்குப் பாதுகாப்பாக, வழிகாட்டியாக மற்றும் உறுதுணையாக இருக்கவேண்டிய பெற்றோர், வளர்ப்புப் பெற்றோர், உறவினர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களிடமிருந்து அனுபவித்த தமிழ் பெண்கள் மற்றும் ஆண்களின் கதையைக் கேட்டு நான் மிகவும் துன்புற்றிருக்கிறேன். இந்த இளம் பிஞ்சுகள் இதுபோன்ற கொடுமைகளை அனுபவித்திருக்கின்ரார்கள் என்பதை அறிய எனது மனம் துயர் உறுகின்றது

ஆனாலும் என்னைப் போலவே பலரும் இத்தகைய அனுபவத்தை எதிர்கொண்டுள்ளனர் என நினைக்கும்போது அது எனக்கு ஒருவித பலத்தைத் தருகின்றது. இத்தகைய விடயங்களை தைரியமாகப் பலர் பகிர்ந்துகொள்கிறார்கள் என நினைக்கும்போது எதிர்காலம் குறித்து நம்பிக்கை துளிர்விடுகின்றது.

இந்தக் கட்டுரையை படித்த பின்னர் ஆத்திரத்தில் இருந்து அசெளகரியம் மற்றும் வெறுப்பற்ற நிலை என பலவிதமான உணர்ச்சிகளுக்கு நீங்கள் ஆளாகலாம். எமது தமிழ் சமூகம் இத்தகைய விடயங்களை திறந்த மனதுடன் எதிர்கொள்ளவேண்டும் என்பதே எனது ஆசை.

Jenny Starke அன்பு (A.N.B.U. – Abuse Never Becomes Us ) என்ற புதிய உதவி அமைப்பின் நிறுவனர்களின் ஒருவர். அன்பு குறித்த மேலதிக விபரங்களுக்கு www.anbu.caANBU


Related News

 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • கனடா இனி கஞ்சா தேசமா? அனுமானமா?
 • கனடாவில் திரையிடப்படும் உரு
 • நம்பிக்கைத் தமிழர்களும் தமிழர்களின் நம்பிக்கையும்
 • தேர்தலில் நிற்பவர் யாரோட ஆள்?!
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *