எத்தியோப்பியாவில் சிமெண்ட் உற்பத்தி நிறுவனத்தின் இந்திய மேலாளர் சுட்டு கொலை

ekuruvi-aiya8-X3

cement-companyஎத்தியோப்பியா நாட்டில் நைஜீரியா நாட்டை சேர்ந்த டங்கோட் என்ற சிமெண்ட் உற்பத்தி நிறுவனம் உள்ளது.  இதன் மேலாளராக இருந்தவர் தீப் கம்ரா.

அவர் தொழிற்சாலையில் இருந்து அடிஸ் அபாபா நகருக்கு வாகனம் ஒன்றில் திரும்பி கொண்டு இருந்துள்ளார்.  அவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.  இந்த சம்பவத்தில் வாகன ஓட்டுநர் மற்றும் கம்ராவின் செயலாளர் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.  அவர்கள் இருவரும் எத்தியோப்பியர்கள்.

கடந்த 2015ம் ஆண்டில் டங்கோட் சிமெண்ட் உற்பத்தி நிறுவனம் தொடங்கப்பட்டது.  இது ஆப்பிரிக்கா மற்றும் நைஜீரியா நாட்டிற்கு வெளியே என 10 இடங்களில் உற்பத்தி நிறுவனங்களை நிறுவியுள்ளது.  எத்தியோப்பியாவின் மிக பெரிய சிமெண்ட் உற்பத்தி ஆலையாக இது உள்ளது.

Share This Post

Post Comment