தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு அனல் வீசும்

veyilதமிழகம் மற்றும் புதுச்சேரியில், 24 இடங்களில், இரண்டு நாட்களுக்கு, அனல் அலை வீசும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கோடை கால வெயில் வாட்டி வதைக்கிறது. ஏப்., வரை, தென் மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் வறுத்தெடுத்த வெயில், சில வாரங்களாக, சென்னை உட்பட, வட மாவட்டங்களுக்கு நகர்ந்துள்ளது.வேலுார், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், சென்னையிலும், வெயிலின் அளவு, 40 டிகிரி செல்ஷியசை தாண்டி உள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி, திருத்தணியில் அதிகபட்சம், 44 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. வேலுார், 43.4; புதுச்சேரி, 42.7; சென்னை விமான நிலையம், 42; பரமத்தி வேலுார், கடலுார், 41.6; பாளையங்கோட்டை, 41.5; திருச்சி, 41.3; மதுரை, 40.6; சென்னை நுங்கம்பாக்கம், 40.1 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது.

இன்னும், இரு தினங்களுக்கு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், நாகை, விழுப்புரம், வேலுார், புதுச்சேரி உட்பட, 24 இடங்களில், அனல் அலை வீசும் என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், சூலகிரியில், 2 செ.மீ., தேன்கனிக்கோட்டை, திண்டுக்கல்லில், 1 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

Share This Post

Post Comment