ரூ.251 விலையில் ஸ்மார்ட்போன்- ஜூன் 28 முதல் விநியோகம்

Facebook Cover V02

251Mobileஜுன் மாதம் 28-ஆம் தேதி முதல் ரூ.251 என்ற மலிவு விலையில் ஸ்மார்ட்போன் விநியோகிக்கப்படும் என்று ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநர் மோஹித் கோயல் கூறுகையில், “வரும் 28-ஆம் தேதி முதல் 251 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் விநியோகிக்கப்படும். முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் முதல்கட்டமாக அவை கிடைக்கும்’ என்றார்.

தில்லி அருகேயுள்ள நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், “ஃபிரீடம் 251′ என்ற பெயரில் 251 ரூபாய்க்கு செல்போன் வழங்குவதாகக் கூறி கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் அந்நிறுவனம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றன.

Share This Post

Post Comment