தூத்துக்குடியில் 7 அடி நீள திமிங்கலம் கரை ஒதுங்கியது

ekuruvi-aiya8-X3

tutocorin_7தூத்துக்குடி முயல் தீவு அருகே 7 அடி நீளமுள்ள ராட்சத திமிங்கலம் புதன்கிழமை கரை ஒதுங்கியது. இதை மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

தூத்துக்குடி தெர்மல்நகர் அனல் மின்நிலையத்துக்குப் பின்புறம் முயல்தீவு அருகே கடற்கரையில் புதன்கிழமை பிற்பகலில் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாகத் தகவல் பரவியது. இதையடுத்து அனல் மின்நிலைய ஊழியர்கள், பொதுமக்கள், மீனவர்கள் என பல்வேறு தரப்பினர் அங்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது, ஏறத்தாழ 7 அடி நீளம் கொண்ட ராட்சத திமிங்கலம் ஒன்று கரையோரத்தில் மிதந்தபடி இருந்தது. இருப்பினும் யாரும் அதன் அருகில் செல்லத் தயங்கினர். பின்னர் மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மீன்வளக் கல்லூரி அதிகாரிகள், மீன்வள ஆராய்ச்சியாளர்கள், வனத்துறை அதிகாரிகள் கடற்கரைக்குச் சென்று அந்த திமிங்கலத்தைப் பார்வையிட்டனர்.

ஆழ்கடலில் வசிக்கும் வகையைச் சேர்ந்த திமிங்கலம் வழி தெரியாமல் கரை ஒதுங்கி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து மீனவர்கள் உதவியோடு அந்த திமிங்கலம் கடலுக்குள் சிறிது தொலைவுக்கு கொண்டுச் செல்லப்பட்டு விடப்பட்டது. கடல் பகுதிக்குள் சென்றதும் அந்த திமிங்கலம் உற்சாகமாக நீந்திச் சென்றதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Share This Post

Post Comment