ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூன் 22-இல் 20 செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவத் திட்டம்

ekuruvi-aiya8-X3

sriharikottaஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில்(இஸ்ரோ), வரும் 22-ஆம் தேதி 20 செயற்கைக்கோள்கள் ஏவப்பட உள்ளதாக அதன் தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

தமிழ்நாடு வீரசைவப் பேரவை மாநில மாநாடு மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர், செய்தியாளர்களிடம் கூறியது:

இந்திய விண்வெளி ஆய்வு மையம் தன்னிறைவு பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. என்ஜின் தொழில்நுட்பத்துக்காக வளர்ந்த நாடுகளை சார்ந்திருக்கும் நிலைமையை மாற்றி வருகிறோம். நமது செயற்கைக்கோள்கள் மட்டுமின்றி வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களையும் விண்ணுக்கு அனுப்பி வைக்கிறோம்.

அந்த வகையில் வரும் 22-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து 20 புதிய செயற்கைக்கோள்களை ஏவ உள்ளோம். இதில் சத்யபாமா பல்கலைக்கழகத்தின் செயற்கைக் கோள், புனே பல்கலைக்கழகத்தின் செயற்கைகோள், இஸ்ரோவின் கார்ட்டோசாட் 2 ஆகிய 3 செயற்கைகோள்கள் நம்முடையவை.

மற்ற 17 செயற்கைக்கோள்கள் அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளின் செயற்கைக்கோள்கள்.

கார்ட்டோ சாட் 2 செயற்கை கோள் மூலம் பூமியின் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்.

மேலும் ஜிஎஸ்எல்வி மாக் 2 ராக்கெட் ஆகஸ்ட் மாதம் ஏவப்பட உள்ளது. இது பூமியின் தட்பவெப்பம், ஈரப்பதம், முப்பரிமாண படங்கள் ஆகியவற்றை சேகரித்து அனுப்பக்கூடியது. இதன் மூலம் பூமியில் ஏற்படும் புயல் போன்ற தட்பவெப்ப மாறுதல்களை துல்லியமாகக் கூறமுடியும். இது வானிலை ஆய்வு மையத்துக்காக அனுப்பப்படுகிறது.

வருங்காலத்தில் ஆண்டுக்கு 2 ஜிஎஸ்எல்வி மாக் 2 ராக்கெட்டுகளை அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இது உலகநாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் மட்டுமே உள்ளது.

ஜிஎஸ்எல்வி மாக் 3 ராக்கெட் டிசம்பர் மாதம் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 4 டன் எடையுள்ள செயற்கைக் கோள்களை எடுத்துச் செல்லமுடியும். இது 280 கிலோமீட்டர் முதல் 32 ஆயிரம் பிஸ்எல்வி 32 ஆயிரம் கிலோமீóட்டர் சுற்றுவட்டப் பாதையில் இயங்கும்.

செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி விட்டு மீண்டும் திரும்பும் மறு பயன்பாட்டு விண்வெளி வாகனம் தொடர்பான ஆய்வுகள் பரிசோதனை முறையில் உள்ளன.

விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வானத்தின் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான செலவு மிகவும் குறைவாகும். இவ்வாறு கிரண்குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.

Share This Post

Post Comment