கோவை ஈஷா மையத்தில் 112 அடி உயர ஆதியோகி சிலை

ekuruvi-aiya8-X3

jvasudev_20கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் குரு பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாலையில் ஆதியோகி ஆலயத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அருளுரை வழங்கினார். அவர் பேசியதாவது:–

தட்சினாயத்திற்கு பிறகு முதல் பவுர்ணமியாக வரும் இந்த நாளில் தான் ஆதியோகியாக இருந்த சிவன் ஆதி குருவாக மாறி தென்திசை நோக்கி அமர்ந்து, சப்தரிஷிகளான தனது 7 சீடர்களுக்கும் முதன்முதலான ஞானத்தை வழங்கி அருளினார்.

இயற்கையில் இந்நாளில் இருந்து உத்தராயணம் வரையிலான அடுத்த 6 மாதங்கள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் தெய்வீகத் தன்மையை மேம்படுத்துவதற்கும் வளர்த்தெடுப்பதற்கும் உகந்த காலமாக உள்ளது.

இந்த நாள் நம் கலாசாரத்தில் மிக முக்கியமான நாளாக கொண்டாடப்பட்டது. ஏனெனில் ஒரு மனிதன் தேவையான முயற்சி செய்தால் இயற் கையின் கட்டுப்பாடுகளை தாண்டி செல்ல முடியும் என்ற கருத்தை, விஞ்ஞானத்தை மற்றும் அதற்கான தொழில்நுட்பத்தை ஆதி யோகி உலகிற்கு வழங்கிய தினம். உடல், மனம் தாண்டி ஒரு மனிதன் வாழ முடியும் என்ற இக்கருத்து 15 ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் தொடங்கியது. ஆனால் இது மேற்கத்திய ஆளுமையால் துடைக்கப்பட்டது.

மேற்கத்தியர்கள் தாங்கள் ஆளுமை செய்த அனைத்து தேசங்களின் கலாச்சாரத்தையும் துடைத்தழித்தனர். நமது வரலாறை எழுதிய மேற்கத்தியர்கள் இந்த உலகமே வெறும் 3000 வருடங்கள் முன்னரே தொடங்கியது என்று கூறினர். உலகிலேயே அவர்களால் அழிக்க முடியாத ஒரே கலாசாரமாக நம் கலாசாரம் விளங்குகிறது.

தற்போது உலகிலேயே பழமையான மொழியாக தமிழ் மொழி உறுதி செய்யப்பட்டுள்ளது. கலாசாரம், மொழி, ஆன்மீகம் அனைத்தும் மனித முன்னேறத்திற்கு அவசியம் என்று உணர்ந்து ஆயிரமாயிரம் வருடங்களாக இந்த தேசத்தில் பாதுகாக்கப்பட்டது. ஆனால் கடந்த 300 வருடங்களில் இது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை மீண்டும் உருவாக்க பெரிய புரட்சி செய்ய தேவை இல்லை. நமக்குள் மாற்றம் கொண்டு வருவதே போதுமானது.

இந்தியாவில் உள்ள 100 கோடி மக்களும் யோகா செய்ய வைக்க வேண்டும். தென் இந்தியாவில் உள்ள கலாசாரம், மொழி, ஆன்மீகம் அனைத்தும் அகஸ்தியரின் பெரும் பணியாலே உருவா னது. தமிழ்நாட்டில் உள்ள 7 கோடி மக்களையும் யோகா செய்ய நாம் பாடுபட வேண்டும். அதற்கு நாளை முதல் ஒவ்வொரு வரும் ஒரு புது மனிதனுக்கு யோகாவை சொல்ல வேண்டும்.

நமது ஈஷா மையத்தில் 112 அடியில் ஆதியோகி சிலை நிறுவப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த சிலை உலகிலேயே பெரியது மட்டுமல்ல மகத்தானதும் கூட. இந்த சிலை பிப்ரவரி 24-ந் தேதி நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் உலகுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது என அவர் பேசினார்.

Share This Post

Post Comment