நீட் தேர்வுக்கு பாரளுமன்றத்தில் அதிமுக எதிர்ப்பு

ekuruvi-aiya8-X3

navaneethakrishnan_0118மருத்துவ,பல் மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை இனி தேசிய தகுதி நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே நடைபெறவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்தது. மேலும் அது வரும் கல்வியாண்டிலேயே அமலாக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தது.

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பிளஸ்-2 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை வழங்கப்பட்டு வந்தது.  இதனால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் வட மாநிலங்களில் பொது நுழைவுத் தேர்வு (சிஇடி) முறை இருந்து வருகிறது.

இதனையடுத்து, மருத்துவ படிப்பில் சேருவதற்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு என்ற பொது நுழைவுத்தேர்வை (‘நீட்’) இந்த கல்வி ஆண்டில் நிறுத்தி வைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

இந்த அவசர சட்டத்தின்படி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் இந்த ஆண்டு மட்டும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வு கிடையாது.

இதனையடுத்து மத்திய அரசின் இந்த அவசர சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.  மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த ஆண்டில் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்து மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

இந்நிலையில் மாநிலங்களவையில் இன்று பேசிய அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசியதாவது:-

பொது மருத்துவ திருத்த மசோதா-2016, பல் மருத்துவ திருத்த மசோதா-2016 இரண்டும் தன்னிச்சையானது, சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது.

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை பின்பற்றாத கிராமப்புற, ஏழை மாணவர்களை இந்த சட்டம் மிகவும் பாதிக்கும். ஒட்டுமொத்த விசயமும் நீதி விசாரணையில் உள்ள நிலையில், இந்த மசோதாவிற்கு அவசியமில்லை என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் தரப்பில் பேசிய நரேந்திர புதனியா, ”பொது நுழைவுத் தேர்வு யோசனை முந்தையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தினுடையது. சுகாதார துறை மந்திரி ஜே.பி.நாட்டாவிற்கு வாழ்த்துக்கள். இருப்பினும் தனியார் கல்லூரிகள் உரிய கண்காணிப்பில் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

மற்றொரு காங்கிரஸ் உறுப்பினர் சுப்ரமணி ரெட்டி பேசுகையில், மழைக்காலக் கூட்டத் தொடர் ஒன்றரை மாதம் இருந்த நிலையில் மே மாதமே அவசர சட்டம் கொண்டு வர என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினார்.

அதேபோல் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் நரேஷ் அகர்வால் மசோதாவை ஆதரித்து பேசுகையில், சுகாதார துறை மந்திரி மருத்துவ கவுன்சிலை தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த மசோதா ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment