ஒட்டிப்பிறந்த மகள்களை அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுக்க விரும்பும் பெற்றோர்

Thermo-Care-Heating

twins_10_7தலை ஒட்டியவாறு இரட்டை குழந்தைகள் தங்களுக்கு பிறக்கும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் விதிவசத்தால் இது மிக அபூர்வமாக நேர்ந்து விடுகிறது.

அப்படித்தான் தெலுங்கானா மாநிலத்தில் முரளி–நாகலட்சுமி என்ற தம்பதியருக்கு 2003–ம் ஆண்டு, இரட்டை பெண் குழந்தைகள் தலை ஒட்டிப்பிறந்தன.

அதைத் தொடர்ந்து 12 ஆண்டுகளாக அவர்கள் இருவரும் ஐதராபாத் ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள நிலோபர் அரசு ஆஸ்பத்திரியில் வைத்து பராமரிக்கப்படுகிறார்கள். அவர்களை பிரித்தெடுப்பதற்கு சுமார் ரூ.10 கோடி செலவாகுமாம். ஆனாலும் அந்த ஆபரேஷன் வெற்றி பெறுமா என்று உறுதியாக கூற முடியாதாம்.

சர்வதேச டாக்டர்கள்

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் இருந்து இங்கிலாந்து, சிங்கப்பூர் என சர்வதேச அளவில் பல நாடுகளில் இருந்து டாக்டர்கள் வந்து வீணா, வாணி என்னும் இந்த இரட்டை சகோதரிகளை பார்த்து சென்றிருக்கிறார்கள்.

ஒட்டிப்பிறந்த தங்கள் மகள்களை அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுக்க பெற்றோர் விரும்புகிறார்கள். இதற்கு உதவுமாறு தெலுங்கானா மாநில அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிலோபர் ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், ‘‘கடவுள்தான் இப்படி அவர்களை படைத்து விட்டார். வீணா, வாணிக்கு லண்டனிலோ, ஆஸ்திரேலியாவிலோ, அமெரிக்காவிலோ ஆபரேஷன்செய்து, அவர்களை பிரித்தெடுத்து, எங்களிடம் ஒப்படைத்து உதவுமாறு அரசாங்கத்தை (கடவுளையும்தான்) வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்’’ என கூறி உள்ளனர்.

இந்த இரட்டை சகோதரிகளை மத்திய மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா, ஆஸ்பத்திரிக்கு வந்து பார்த்தார். அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘இந்த குழந்தைகளுக்கு கல்வியும், பெற்றோருக்கு வீடும், வேலைவாய்ப்பும் தர மத்திய அரசு பரிசீலிக்கும்’’ என கூறினார். மாநில அரசும் பரிசீலிப்பது குறிப்பிடத்தக்கது.

ideal-image

Share This Post

Post Comment