தமிழக சட்டசபையில் இன்று நிறைவேறுமா ஜிஎஸ்டி மசோதா?

sdsd

TN_assemதமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜூன் 14 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. கூட்டத் தொடரின் முதல் நாளான ஜூன் 14 அன்று, தமிழக சட்டசபையில் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் வீரமணி இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இந்த மசோதா மீது இன்று (ஜூன் 19)விவாதம் நடைபெற உள்ளது. விவாதத்திற்கு பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட உள்ளது. ஆனால், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜிஎஸ்டி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க திமுக திட்டமிட்டுள்ளது.

ஜிஎஸ்டி மசோதா மீதான விவாதத்தின் போது திமுக சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன் பேச உள்ளார். இதனால் 2 நாள் வார விடுமுறைக்கு பிறகு கூடும் இன்றைய கூட்டத்திலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Post

Post Comment