தமிழகம் முழுவதும் 74.26 சதவீதம் ஓட்டுப்பதிவு

ekuruvi-aiya8-X3

rajesh_lakkani_17தமிழ்நாட்டில் பதிவான வாக்கு சதவீதம் இன்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 74.26 சதவீதம் ஓட்டு பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் உள்ள 232 தொகுதிகளிலும் அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த 232 தொகுதிகளிலும் மொத்தம் 5 கோடியே 77 லட்சத்து 33 ஆயிரத்து 574 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் 4,28,73,674 பேர் வாக்குபதிவு செய்து உள்ளனர். ஆண்கள் 2,12,44,129 பேரும், பெண்கள் 2,16,28,807 பேரும் ஓட்டு அளித்து உள்ளனர். மூன்றாம் பாலினர் (திருநங்கை) 738 பேர் வாக்களித்து உள்ளனர். ஓட்டு சதவீதம் 74.26 ஆகும்  இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.

Share This Post

Post Comment