செந்தூரா செந்தூராசேர்தே செல்வோம் என்று பாடியே வந்த குருவியார் – குருவியார் @ Tim Hortons

0108timhortons  செந்தூரா செந்தூராசேர்தே செல்வோம் செந்தூரா என்று உற்றசாகமான பாடலுடன் ரிம் ஹோட்டனுக்குள் நுழைந்த குருவியார் வழமை போலவே ஒரு டபிள் டபிளை ஓடர் எடுத்துக் கொண்டு போய்  குப்பண்ணாவும் சுப்பண்ணாவும் இருந்த மேசையில வைச்சுப் போட்டு ஹாயா இருந்தார்.

என்ன குருவியர் அடிக்கடி காணமல் போறியள் சரியான பிசியான வேலை போல எண்டு குப்பண்ணா அரட்டையை ஆரம்பிக்கவும் சுப்பண்ணா குருவியார ரிம் ஹோர்டன் பக்கம்  காணரட்டில் குருவியாரின்ர பேப்பரையும் காணக் கிடைக்கிதில்ல உது வேலைக்காகது கண்டியளோ எண்டு கொஞ்சம் ரென்சனான குரலில சுப்பண்ணா கொமண்ட் அடித்தார்.
logo-mobile
அட விசரா ஒழுங்கா பேப்பர் அடிக்கிறது லேசுப்பட்ட விசயம் எண்டு நினைச்சியோ அதுவும் எக்ஸ்குளுசிவா எழுதுற ஆக்கள கட்டி மேச்சு பேப்பர கொண்டு வாறதுக்குள்ள நாக்கு மூக்கெல்லாம் தள்ளிப் போடும்.

அதுக்குள்ள பேப்பர் எழுதுற பெரிய பெரிய ஆக்களை எல்லாம் தள்ளிக் கொண்டு போய் வெளியில விடுறதுக்கு போத்திலும் கையுமா நிக்கிற பெரிய ‘துரை’ மாரின்ர அன்புத் தொல்லையளும் எங்களப் பற்றி எழுதினியெண்டா வழக்கு போடுவம் எண்டு இல்லாத மீசையை முறுக்கிக் கொண்டு திரியிற ராசாக்களின்ர அன்புத் தொல்லைகள் அத்தனையும் தாண்டி தானே பேப்பர கொண்டு வரவேண்டிக் கிடக்கு.

உப்பிடி கஸ்டப்பட்டு பேப்பர் அடிக்கிறதுக்கு பேசாமால் ஊருக்கு காசு அனுப்பிறதுக் எண்டு சொல்லி ஒரு புரோக்கிறாம நடத்தி காசுபாக்கலாமே எண்டு குப்பண்ணா பெரிய மிசைல் ஒண்டை அடிச்சு விட்டார்.

ஓமடா தம்பி புதுசு புதுசா ஜடியாக்களோட ஆக்கள் வெளிக்கிடுகினம் எண்டு தான் நானும் கேள்விப்பட்டன்.
senthoora_bogan_19473
அவையள கேப்பார் மேய்பார் இல்லாதததால அவை சொல்லிறத வேத வாக்காக எடுத்துக் கொண்டு அவைக்கு காவடி தூக்கிறதுக்கும் கொஞ்சம் மறை கழண்டதுகள் இருக்கு தானே என சுப்பண்ணாவும் தன்ர பொயின்ர எடுத்து விட்டார்.

தம்பியவ ஊரில இருக்கிற சனத்துக்கு வெளிநாட்டில இருக்கிற ஆக்கள் உதவி செய்ய வேணும் எண்டது முக்கியம் தான் ஆனால் பல இலட்சம் செலவழிச்சு இந்தியாவில இருந்து ஆக்கள கூட்டிக் கொண்டு வந்து புரோக்கிறாம் செய்து தான் காசு அனுப்ப வேணும் எண்டதில்ல தானே அதோட இஞ்ச நடக்கிற புறோக்கிறாமில பெரும்பாலான புரோக்கிறம் நடத்தினவையின்ர கையை மட்டுமில்ல அங்க பிங்க எண்டு எல்லா இடத்திலயும் சுட்டுப் போடும். இந்த லட்சணத்தில சும்மா ரிக்கெட் விக்கிறதுக்கும் புரமோசனுக்கும் ‘தாயக மக்களுக்கு உதவும் நோக்கில் நடைபெறும் மாபெரும்…. ஏண்டு ஒரு வரியை அடிச்சு விடுறது எவ்வளவு போக்கிலித் தனம் தெரியுமே எண்டு  குருவியார் கொதிக்கத் தொடங்கினார்.

புரோக்கிறாம் நடத்திறவ உண்மையில ஊருக்கு காசு அனுப்பத் தான் நடத்திறதா இருந்தால் முதலில அங்க யாருக்கு எவ்வளவு காசு குடுக்கப் போறம் எண்டு அறிவிச்சுப் போட்டு நிகழ்சியை செய்ய வேணும்.

சனம் வருதோ இல்லையோ அந்த காச அறிவிச்ச மாதிரி அனுப்ப வேணும்; இது தான் சரியான முறையா இருக்கும் இதை செய்ய வக்கில்லாமல் சும்மா பீலா விடுற ஆக்களை  நாக்கப் புடுங்கிற மாதிரி கேல்வி கேட்க வேணும் எண்டு தனது குருவியார் குமுறி முடிச்சார்.

அதில்ல குருவியார் நான் ஒரு விசயம் அரசல் புரசலா கேள்விப் பட்டனான் இஞ்ச இருந்து போய் பேமசா வந்த ஒராள்  இஞ்ச நடக்கிற புறோக்கிறமில புளொக் பண்ணிட்டினமாம் எண்டு ஒரு கேள்வி எண்டு புது விசயம் ஒண்ட எடுத்து விட்டார் குப்பண்ணா.

ஓமடா தம்பி நானும் காரில வரேக்க இந்தியால இருக்கிற என்ர சினேகிதப் பெடியன் கோல் பண்ணி உந்த புதினத்தை தான் சொன்னவன் ஏன் அண்ணை உங்கட ஆக்கள் இப்பிடி இருக்கினம் எண்டு அவன் என்னை கேள்வி கேக்கிறான். நான் சொன்னன் அட அவை அப்பிடிச் சொன்னால அங்க இருந்து இஞ்ச வாறா அவருக்கு மதி எங்க போச்சு எண்டு மறுத்தான் ஒண்ட எடுத்து விட்டன் பெடியன் சுருண்டிட்டான். இல்ல குருவியார்  அவையள் காசில கண்ணா இருக்கிறவ உந்த லோக்கல் பொலிட்டிக்சால தங்களுக்கு சுளையா வாற காச விட விரும்ப மாட்டினம் தானே எண்டு எனக்கு கதையளக்கிறான் அவன்  எண்டார் குருவியார்.

உதுக்கு என்னதான் சொலுசன் காசிருக்கிறனவன் கோஸ்டி வைச்சு பாட்டு பாடுவான் அதை படமா எடுத்து பேஸ்புக் யு ரியுப் எண்டு எல்லாத்திலயும் போட்டு பேமசாகுவான். ஏங்கட சனம் பேமஸ் ஆன ஆக்கள் காசு கேட்டால் கண்ண மூடிக்கு கொண்டு அள்ளிக் குடுப்பினம் தானே. புறகென்ன கொஞ்சம் அங்காலயும் கனக்க இஞ்சாலணும் போக கோயில் கணக்கு நிவாரணக் கணக்கா மாறிப் போகும். எங்கட சனத்துக்கிருக்கிற சோர்ட் ரேம் மெமரி புரொப்பிளம் (short term memory problems) தீராத வரைக்கும் தலையில அரைப்பரைக்கிறவங்களை யாராலயும் தடுக்கேலாது. உங்களை எங்க மாதிரி இரண்டு மூன்று லூசுகள் நேரம் போகாமல் கோப்பிக் கடையில இருந்து கதைச்சு போட்டு போறதோட சரி வேற ஒரு ஆணியையும் புடுங்கேலாது எண்டு சுப்பண்ணா தன்ர பங்குக்கு ஒரு கருத்தை எடுத்து விட்டுப் போட்டு கதிரயில இருந்து எழும்பினார்.

என்ன ஆயத்தம் போல எண்டு குருவியார் கேக்கவும் உங்களப் போல நாங்கள் செல்லப் பிள்ளையளே குருவியார் இனித் தான் போய் மிச்ச கிளினிங் செய்ய வேணும் எண்டு போட்டு புறப்பட்டார் சுப்பண்ணா.


Related News

 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • கனடா இனி கஞ்சா தேசமா? அனுமானமா?
 • கனடாவில் திரையிடப்படும் உரு
 • நம்பிக்கைத் தமிழர்களும் தமிழர்களின் நம்பிக்கையும்
 • தேர்தலில் நிற்பவர் யாரோட ஆள்?!
 • ஜஸ்ரின் ரூடோ தடுமாறுகின்றாரா? ரதன்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *