ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் நேரமாற்றத்தை அகற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் நேரமாற்றத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜீன்-க்ளூட் ஜுங்கரின் திட்டம், ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 உறுப்பினர்கள் மற்றும் பிரஸ்ஸல்ஸ் ஆகியவற்றின் தேசிய அரசாங்கங்களுக்கிடையில் ஒரு பெரிய மோதலாக மாறியுள்ளது.

நேர மாற்றத் திட்டம் எரிசக்தியை சேமிப்பதுடன், உற்பத்தித்திறனை அதிகரிப்பதாக சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை சுகாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் பல ஐரோப்பிய போக்குவரத்து அமைச்சர்கள் ஆணைக்குழுவின் முன்மொழிவைப் பற்றி வெளிப்படையான சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்,

இந்த நடவடிக்கையில் மூன்றாம் தரப்பு நாடுகளுடன் நேர மண்டல முடிவுகளை வரிசைப்படுத்துவதற்கான எந்த வழிவகையும் இல்லை. விமான போக்குவரத்து மற்றும் ரயில்வே சேவைகள் தொடர்பில் முக்கிய பிரச்சினைகள் தோன்றுவதுடன், கணினி துறை சார்ந்தும் பிரச்சினைகள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜங்கரின் போக்குவரத்து ஆணையர் விக்டோரியா பல்க், ஐரோப்பாவின் தேசிய அரசாங்கங்களுடனான ஒருமித்த கருத்தை தமது ஆணையகத்தால் எட்ட முடியும் என நம்பிக்கை வௌியிட்டுள்ளார். அதேவேளை, ஒஸ்ட்ரியாவின் போக்குவரத்து அமைச்சரான நோபெர்ட் ஹோஃபர், 2021 வரை இந்த விவகாரத்தை விவாதிப்பதற்கு தாம் முன்மொழிய போவதில்லை என்று கூறியுள்ளார்.


Related News

 • ஏலத்திற்கு வரும் ஈஃபிள் கோபுரத்தின் பழைய படிக்கட்டு
 • ஐரோப்பாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைக்கு உதவ தயார் – டிரம்ப்
 • முதலாம் உலகப்போர் நினைவஞ்சலி விழாவில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே
 • அமெரிக்காவிற்கு பதிலடிகொடுக்க தயாராகிறது ஐரோப்பா
 • ஐரோப்பிய பாதுகாப்பு படையினர் செயற்திறனுடன் பணியாற்றுவது அவசியம் – பிரான்ஸ் ஜனாதிபதி
 • ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் நேரமாற்றத்தை அகற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு
 • கோர்சியாவில் சூறாவளி காரணமாக மின்சார துண்டிப்பு
 • அயர்லாந்தின் புதிய ஜனாதிபதி- மைகல் டீ ஹிஜ்ஜின்ஸ்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *