ஐ.நா. கூட்டு நிதிக்காக இந்தியா சார்பில் 651 கோடி ரூபாய் வழங்கப்படும் – இந்திய தூதர் உறுதிமொழி

India-to-contribute-651-crore-rupees-to-UN-development-fundஐநா சபையில் மேம்பாடு நடவடிக்கைகளுக்கான உறுதியேற்பு மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஐநா கூட்டு நிதிக்கு சுமார் 398.98 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக 20 நாடுகள் வாக்குறுதியளித்தன. இந்தியா சார்பில் ஐநா கூட்டு நிதிக்கு கூடுதலாக ரூ.600 கோடி நிதி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.

மேலும், ஐநா இதர செயல் திட்டங்களுக்காக கூடுதலாக ரூ.10.582 மில்லியன் அமெரிக்க டாலரையும் இந்தியா தனது பங்காக வழங்குகிறது. உறுதியேற்பு மாநாட்டில் கலந்துகொண்ட ஐநா.வுக்கான இந்திய தூதர் அஞ்ஜனி குமார் இதனை அறிவித்தார்.

இது தொடர்பாக அஞ்ஜனி குமார் கூறுகையில், “ஐநா கூட்டு நிதிக்கு 5 ஆண்டுகளுக்குள் 651 கோடி ரூபாய் வழங்குவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது. ஐநாவின் நடவடிக்கைகளுக்கு நிதி ஆதாரம் அவசியம் என இந்தியா நம்புகின்றது. இந்த ஆண்டு இந்தியா 5 மில்லியன் டாலர் வழங்கியுள்ளது. இதில் 2 மில்லியன் டாலர் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட டோம்னிகா, ஆன்டிகுவா மற்றும் பார்புடாவில் மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படும்” என்றார்.

Share This Post

Post Comment