19 தேசத் துரோகிகளை தேசிய வீரர்களாக அறிவித்தார் மைத்திரி!

ekuruvi-aiya8-X3

mai654வெள்ளையர் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியதால் பிரித்தானிய ஆளுனர் ரொபேர்ட் பிரௌண்ரிக்கினால், தேசத்துரோகிகள் என பிரகடனம் செய்யப்பட்ட கெப்பிட்டிக்கொல திசாவே உள்ளிட்ட 19பேரும் தேசத்துரோக குற்றச்சாட்டிலிருந்து விடுபட்டுள்ளனர்.

கண்டிய சிங்களத் தலைவர்களான கெப்பிட்டிபொல திசாவே உள்ளிட்ட 19 பேரையும், 1818ஆம் ஆண்டு, ஜனவரி 10ஆம் திகதி தேசத் துரோகிகளாக அறிவித்திருந்தார் ஆளுனர் ரொபேர்ட் பிரௌண்ரிக்.

198 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்துள்ளார். அத்துடன் இவர்கள் அனைவரையும் சுதந்திரத்துக்காகப் போராடிய தேசிய வீரர்கள் எனவும் பிரகடனம் செய்தார்.

1818ஆம் ஆண்டு இவர்கள் வெல்லசவில் பிரித்தானிய ஆட்சியை எதிர்த்துப் போராடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment