துறைமுக நகரத்தை கொழும்புடன் இணைக்க மூன்று பாதைகள்!

Facebook Cover V02

port-city-colombo-chec-2-1சீன நிறுவனத்தினால் அமைக்கப்படும் துறைமுக நகரத்தை கொழும்பு நகருடன் இணைப்பதற்கு நெடுஞ்சாலை, துறைமுகப் பாதைகள் மற்றும் சுரங்கப் பாதைகள் என்பன அமைக்கப்படவுள்ளன.

இதற்காக 1.5 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. துறைமுக நகரை கட்டுநாயக்கா விமானநிலையத்துடன் இணைக்கும் நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில் நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது.

அத்துடன் துறைமுக நகரிலிருந்து கொழும்பு நகரத்தைஅடைவதற்காக இரண்டு சுரங்கப் பாதைகளை அமைப்பது தொடர்பாக சிறிலங்காஅரசாங்கத்துடன் சீன நிறுவனம் பேச்சு நடாத்தவுள்ளது.

இதைவிட துறைமுக நகருக்கும் கொழும்புக்குமிடையில் இலகு தொடருந்து போக்குவரத்து முறையொன்றும் உருவாக்கப்படவுள்ளது.

அதேவேளை, கடந்த மாதம் வரையில், துறைமுக நகரத்தை உருவாக்குவதற்கான 40 வீத பணிகள் முடிவடைந்துள்ளன என்று சீன நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Share This Post

Post Comment