அமெரிக்கவில் தேவாலயத்தில்; மர்ம நபரால் துப்பாக்கிச்சூடு

Facebook Cover V02

gunmanஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் அமைந்துள்ள பாப்டிஸ்ட் தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஏராளமானோர் கூடியிருந்த நிலையில் அங்கு வந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சராமாரியகச் சுட்டார். இந்தக் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு இலக்காகி 27 பேர் பலியாகினர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் காயமடைந்து உயிருக்குப் போராடியவர்களை உலங்குவானூர்தியின் உதவியுடன் மீட்டு, அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளதோடு, பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

Share This Post

Post Comment