யாழ்.பல்கலைக் கழகத்தின் தற்போதைய நிலை தொடர்பில் துணைவேந்தர் குழுவினரை ஜனாதிபதி கொழும்பிற்கு அழைத்துள்ளார்

Facebook Cover V02

maithiri24யாழ்.பல்கலைக் கழகத்தின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராயும் முகமாக துணைவேந்தர் உள்ளிட்ட குழுவினரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கொழும்பிற்கு அழைத்துள்ளார்.

யாழ். பல்கலைக் கழகத்தில் கடந்த 16ம் திகதி இடம்பெற்ற அசம்பாவித்த்தினைத் தொடர்ந்து பல்கலைக் கழகத்தின் சில பீடங்கள் தற்போதுவரை இயங்காதுள்ளது. குறிப்பாக விஞ்ஞானபீடம் இதுவரை மீள ஆரம்பிக்காது கடந்த 17 நாட்களாக மூடப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறு மூடப்பட்டுள்ள பீடங்களை மீள ஆரம்பிக்கும் நோக்கில் மேற்கொள்ள வேண்டிய வழிவகைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்திப்பிற்காக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது

Share This Post

Post Comment