ஒரே நாளில் 38 பேர் தூக்கில் இடப்பட்டனர்

ekuruvi-aiya8-X3

isis_threat_to_sri_lanka-450x228ஈராக்கில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டனர் என குற்றம் சாட்டப்பட்ட 38 பேருக்கு நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஈராக் அரசால் கைது செய்யப்பட்டுள்ள ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 38 பயங்கரவாதிகள் ஈராக்கின் தெற்கு மாகாணத்தி்ல் உள்ள நஸ்ரியாஹ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஈராக் நீதித்துறை அமைச்சகம் இத்தகவலைவெளியிட்டுள்ளது.

கடந்த செப்., 25ல் 42 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதற்கு பின்னர் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் நேற்று தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈராக்கின் இந்த முடிவுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Share This Post

Post Comment