தொண்டராசிரியர்கள் நிரந்தர நியமனம் கோரி காலவரையறையற்ற உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில்!

ekuruvi-aiya8-X3

thondarவடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தொண்டராசிரியர்கள் நிரந்தர நியமனத்தினை கோரி கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று காலை 9.30 மணியளவில் வடமாகாண தொண்டராசிரியர்கள் வடக்கு ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஜனவரி மாதம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது தாங்கள் ஆசிரியர்களாக கடமையாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியே இப்போராட்டம் நடைபெறுகிறது.

இந் நிலையில் தொண்டராசிரியர்களை வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் மதியம் 12 மணியளவில் சந்தித்தார். எதிர்வரும் ஜனவரி மாதம் 4ம் திகதி ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகின்றபோது சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாகவும் தெரிவித்தார்.

எனினும் அவரது கருத்தை தொண்டராசிரியர்கள் நிராகரித்துவிட்டனர்.

 image-0-02-06-68e394713d1f9666142fbed8c743f49965b58dbc46ebc4fd2cf62c80e6a202ba-V-1024x576 image-0-02-06-1458bba4183d569ff20a61c4f821bbef1b6fed343c7902667ab5966f6c3095c4-V-1024x576image-0-02-06-37b7acf22c441bfd00823c78b59acef7c3b33430fef8d1aa43344108671ab719-V

Share This Post

Post Comment