என்.டி.பி தலைவராக நீடிக்கும் தகுதியை இழந்தார் தோமஸ் மல்கெயர் !!

ekuruvi-aiya8-X3

நேற்று எட்மொண்டோனில் நடைபெற்ற என்.டி.பி கட்சியின் பிரமாண்ட மாநாட்டில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தோமஸ் மல்கெயர் தலைவராக நீடிப்பதற்கு தகுந்த நம்பிக்கை வாக்குகளை பெறவில்லை என்பதால் என்.டி.பி கட்சி புதிய தலைமையை தேடி வருகிறது. கடந்த வருடம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் என்.டி.பி யின் அரசியல் செயல்பாடுகளும், யுக்திகளும் சரியான பாதையில் செல்லவில்லை என்ற விவாதம் அந்தக் கட்சியினருக்குள்ளேயே புகைந்து கொண்டிருந்தது,

இது குறித்து விவாதிக்க என்.டி.பி கட்சியினர் கலந்து கொண்ட பிரமாண்ட மாநாடு ஒன்றுக்கு எட்மொண்டோனில் ஏற்பாடு செய்யபப்ட்டிருந்தது. முதலில் இம்மாநாட்டில் கலந்து கொண்டிருந்த என்.டி.பி பாராளுமன்ற உறுப்பினரகளிடையே எழுச்சிமிகு உரையாற்றினார் கட்சித் தலைவர் தோமஸ் மல்கெயர். அதைத் தொடர்ந்து அவர் தலைமை நீடிக்க வேண்டுமா என்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

எப்படியும் இதில் வென்று விடுவார். தோமஸ் மல்கெயர் தலைவராக நீடிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்றே பலரும் கணித்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக குறைவான விழுக்காடு வாக்குகளே அவருக்கு கிடைத்துள்ளதால் , விரைவில் புதிய தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்கு கட்சி தள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமானால் 70 சதவீத வாக்குகளை நேற்று பெற்றிருக்க வேண்டும். ஆனால் 50 விழுக்காட்டிற்கும் குறைவாகவே பெற்றதால் அதற்கான வாய்ப்பு கூட இல்லாத நிலை தோமஸ் மல்கெயருக்கு ஏற்பட்டுள்ளது. tom-mulcairjpg.jpg.size.xxlarge.letterbox

Share This Post

Post Comment