மஹிந்த தோல்வியைத் தழுவி வீடு சென்ற போது குண்டு துளைக்காத வாகனத்தையும் எடுத்துச் சென்றார் – ஜனாதிபதி

maitiri2133முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தோல்வியைத் தழுவி வீடு சென்ற போது குண்டு துளைக்காத வாகனத்தையும் எடுத்துச் சென்றார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வீடு செல்வதற்காக ஹெலிகொப்டர், பாதுகாப்பிற்கு விரும்பிய இராணுவ அதிகாரிகள் மற்றும் குண்டு துளைக்காத வாகனங்கள் போன்றவற்றை மஹிந்த எடுத்துச் சென்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தோல்வியடைந்து சென்ற எந்தவொரு அரச தலைவரும் உலகில் இருக்க மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். மொனராகல் பிபிலே பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் சிலர் குற்றம் சுமத்தி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மின்சார நாற்காலி பற்றிய பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர் எனவும், தாம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் இந்த பீதி இல்லாதொழிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Related News

 • பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு
 • டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்
 • புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு
 • பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
 • ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
 • கட்சி வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயார்
 • பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு
 • அனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *