யோஷித ராஜபக்ஷவின் தொலைகாட்சி சேவை மற்றும் காணி கட்டிடம் பருமுதல்!

Facebook Cover V02

Yositha rajapakshaமஹிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமான CSN தொலைக்காட்சி சேவை மற்றும் அதனை நடத்தி செல்லப்பட்ட நிறுவனத்தின் காணி என்பன நகர அபிவிருத்தி அதிகார சபையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான பத்தரமுல்லையில் அமைந்துள்ள 29 பெர்சஸ் காணியை டீ.ஏ.ராஜபக்ச அறக்கட்டளைக்கு 2003ஆம் ஆண்டு 30 வருடங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டது. இதற்காக வருடாந்தம் 163,125 ரூபா செலுத்தப்பட்டுள்ளது.

எனினும் அந்த காணியை வேறு எந்தவொரு நடவடிக்கைக்காகவும் பயன்படுத்த முடியாது என்ற ஒப்பந்தத்தை மீறி, CSN வர்த்தகத்தை நடத்தி சென்ற காரணத்தினால் அதற்கமைய ஒப்பந்தம் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடம் மற்றும் அதன் சொத்துக்கள் தொடர்பில் உரிமையை உறுதி செய்யும் உரிமையாளர் இல்லாமையினால் அந்த கட்டடம் அரச உடமையாக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் யோஷித ராஜபக்சவின் கால்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வர்க் (CSN) தொலைக்காட்சி சேவைக்கு சொந்தமான ஒளிபரப்பு வாகனங்கள் தேசிய தொலைக்காட்சி சேவையிடம் ஒப்படைக்குமாறு கடுவெல நீதிபதியால் உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment