இலங்கை தொடர்பில் நான் எடுத்த முடிவு சரியானதே!

roniதனது ஆட்சிக்காலத்தில் இலங்கை தொடர்பாக தான் எடுத்த முடிவு சரியானதே என அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ரொனி அபோட் தெரிவித்துள்ளார்.

தனது இரண்டு வருட ஆட்சிக்காலம் தொடர்பில் முன்னாள் பிரதமர் ரொனி அபோட் கட்டுரையொன்று எழுதியுள்ளார்.

அதிலேயே, தனது ஆட்சிக் காலத்தில் சிறீலங்கா அரசுடன் இணைந்து செயற்பட்டமை தொடர்பில் தான் பெருமைகொள்வதாகவும், மனித உரிமைகள் அமைப்புக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தான் சட்டவிரோதப் புகலிடக்கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்த முயற்சித்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தேசிய நலனைக் கருத்திற்கொண்டே புகலிடக்கோரிக்கையாளர்களை தான் நாட்டுக்குள் பிரவேசிப் பதைத் தடை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment