சிறீலங்கா தொடர்பில் மௌனம் காக்கும் சீனா!

ekuruvi-aiya8-X3

china-930x718நாளை சீனாவுக்குப் புறப்படும் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சீனப் பயணத்தின்போது முக்கிய உடன்பாடுகள் சிலவற்றில் பிரதமர் கையெழுத்திடுவார் என சிறீலங்காத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும் சீனா அது தொடர்பில் மௌனம் காத்து வருகின்றது.

நாளைமுதல் எதிர்வரும் ஒன்பதாம் திகதிவரை சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீன அதிபர், பிரதமர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

அத்துடன் பிரதமரின் சீனப் பயணத்தின் போது பல்வேறு உடன்படிக்கையில் இருநாடுகளும் கையெழுத்திடவுள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளபோதிலும், இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சரிடம் வினவியபோது அவர் நேரடியாகப் பதிலளிக்காது தவிர்த்துள்ளார்.

இது தொடர்பில் அவர் பதிலளித்தபோது, சிறிலங்காப் பிரதமர் சீனாவுக்கான அதிகாரபூர்வமான பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அவரைச் சீனத் தலைவர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.

சீனாவும் சிறீலங்காவும் பரஸ்பரம் நட்புறவுகொண்ட அயல் நாடுகள், இரு தரப்புக்கும் பரஸ்பரம் நன்மையளிக்கும் ஒத்துழைப்பு இரு தரப்புக்கும் நன்மையளிக்கும்.

பாரம்பரிய நட்புறவை வலுப்படுத்தும் வாய்ப்பாகவும், பல்வேறு துறைகளில் நடைமுறை ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் வாய்ப்பாகவும் நாம் இதனைப் பார்க்கின்றோம். சீனா- சிறிலங்கா மூலோபாய ஒத்துழைப்புக் கூட்டை நேர்மையுடன், பரஸ்பர உதவி மற்றும் நீண்டகால நட்புறவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் வாய்ப்பாக நாம் இதனைப் பயனப்படுத்தவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment