திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

ekuruvi-aiya8-X3

thirumurugan-gandhi-arrestedமே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, அருண்குமார், இளமாறன், டைசன் ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

மெரினா கடற்கரையில் கடந்த 21-ந்தேதி முள்ளி வாய்க்கால் நினைவு தினத்தை கடைப்பிடிக்கப் போவதாக மே 17 இயக்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

ஆனால் மெரினா கடற்கரையில் போராட்டங்கள் நடத்த காவல் துறை தடை விதித்துள்ளனர். அந்த தடை உத்தரவை மீறி கடந்த 21-ந்தேதி திருமுருகன் காந்தி உள்பட அந்த அமைப்பைச் சேர்ந்த பலர் போராட்டம் நடத்த சென்றனர்.

திருமுருகன் காந்தி உள்பட 17 பேரை காவல் துறை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சிறையில் இருக்கும் அவர்களுக்கு ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்கள்.

இந்த நிலையில் திருமுருகன் காந்தி, அருண்குமார், இளமாறன், டைசன் ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே திருமுருகன் காந்தி மீது ஐ.ஐ.டி. மீது தாக்குதல் நடத்தியது மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டங்கள் நடத்தியது தொடர்பாக 17 வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பதாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment