“திலீபன்” திரைப்படம் என்னாச்சு ? –

ekuruvi-aiya8-X3

ramanan-1தன் வரலாற்றை தெரிந்து கொள்ளாத இனம் தன்னை சுய இன அழிப்புச் செய்து கொள்ளும் என்கின்றனர் வரலாற்றாய்வாளர்கள்.
இந்தக் கூற்று எந்த இனத்திற்கு பொருந்துகின்றதோ இல்லையோ தமிழினத்திற்கு பொருந்தும்.
இன்றைக்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொற்றம் பெற்றதாக கருதப்படும் தமிழ் மொழிபேசும் இனம் தன் வரலாற்றை தொலைத்து நிற்பது போல் வேறெந்த இனமும் தொலைத்ததாக வரலாறு இல்லை.

thilipan-filmஇது தற்செயலானதா திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு அழிவின் நீட்சியா என்பது ஆய்விற்குட்படுத்தப்பட வேண்டியது.ஆனால் இனியும் இந்த நிலை நீடிக்காமல் இருப்பதற்கான முனைப்புக

thilipan
thilipan

ளையாவது தமிழர்கள் செய்கின்றார்களாக என்றால் கவலையுடன் இல்லை என்றே பதில் வரும்.

இணையவழித் தொடர்பாடல் உலகை சுருக்கி உள்ளங்கைகளுக்குள் திணித்து வைத்துள்ள  இந்த நவீன சூழலிலும் தமிழர்கள் வரலாற்றை ஆவணப்படுத்தம் முயற்சிகள் முன்னெடுக்கப்படாமை மிகப்பெரும் ஏமாற்றமே.
இந்தியாவில் இருந்து வெளியாகும் பெரும்பாலான இலக்கிய படைப்புகளும் திரைப்படங்களும் தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் கணக்காகவே தமிழர்களின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்டம் கையாளப்பட்டு வருகின்றது.
ஆங்காங்கே வரலாற்றை பதிவு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட  முயற்சிகளும் வல்லாதிக்கத்தின் பலம் கொண்ட கரங்களால் நசுக்கப்பட்டு அழிக்கபடவே அந்த எண்ணத்தை மூட்டைகட்டி விட்டு வணிக ரீதியான திரையாக்க முயற்சிகளுக்குள் படைப்பாளிகள் தங்களை ஈடுபடுத்த தொடங்கி விட்டனர்.
இந்த பின்னணிகளில் இருந்து வேறுபட்டு ஒரு வரலாற்று நாயகனின் வாழ்வை திரையில் பதிவு செய்யும் முயற்சியை முன்னெடுத்திருக்கின்றார் இயக்குனர் ஆனந்த மூர்த்தி.
பெங்களூரில்  பிறந்த தமிழன்  தான் இந்த ஆனந்தமூர்த்தி இயக்குனர் கதிரிடம் ‘காதல் தேசம்’, ‘காதலர் தினம்’ போன்ற திரைப்படங்களிலும், இயக்குநர் அமீரின் ‘ஆதிபகவன்’ படத்திலும், இயக்குநர் பாலாவின் ‘பரதேசி’யிலும் பணிபுரிந்த அனுபவத்தோடு ‘திலீபன்’ என்ற தனது வாழ்வின் இலட்சியப் படைப்பை ஆரம்பித்துள்ளார்.

thilipan
thilipan

தமிழர்களின் சரியான வரலாறு எங்கேயும் பதிவாகிவிடக் கூடாது என்ற சாபம் ஆனந்த மூர்த்தியையும் விட்டுவைக்கவில்லை.

தியாக தீபம் தீலீபனின் 30வது ஆண்டு நினைவாக வெளிவரும் eகுருவி சிறப்பிதழுக்காக ஆனந்தமூர்த்தியை தேடிப் பிடித்து தொலைபேசியில் பேசினோம் .
தான் சிறுவனாக இருந்த காலத்தில் தமது வீட்டிற்கு அருகில் இருந்து விடுதலைப் புலிகளின் அலுவலகத்தில் தொடங்கிய தமிழின விடுதலை தொடர்பான உணர்வு தீலீபனின் வீரமரணத்துடன் தன்னுள் பெருந்தீயாய் மாறியதாக கூறினார்.

anathas
ஆனந்தமூர்த்தி இயக்குனர்

ஆகிம்சையின் தந்தையாக கருதப்படும் இந்திய தேசபிதா மகாத்மான காந்தியின் போராட்ட வடிவத்தின் உச்சத்தை தொட்டு தன் உயிரை ஆகுதியாக்கிய மகத்தான வீரனின் வரலாற்றை தனது இனம் மறந்துவிடக் கூடாது என்றும் காந்தியை விட அகிம்சையின் வீச்சை உலகிற்கு உணர்த்திய தீலிபனின் தியாகத்தை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தான் இந்த சவாலான பயணத்தை ஆரம்பித்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.

திலீபனின் திரைப்படத்திற்கான ஆய்வுகளை சுமார் 15 ஆண்டுகளாக முன்னெடுத்ததாகவும் திலீபன் வாழ்ந்த வீட்டிற்கு சென்று அவர் குறித்த பல்வேறு விபரங்களை  பெற்றதாகவும் திலீபனுடன் பழகிய மனிதர்கள் போராளிகள் தளபதிகள் என பலரிடம் இருந்து பெற்றுக் கொண்ட தகவல்களின் அடிப்படையில் இந்த திரைப்படத்திற்கான திரைக்கதை உருவாக்கபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த திரைப்படம் திலீபனின் வரலாற்றை எந்தவித சமரசமும் இன்றி திரையில் கொண்டு வரும் ஒரு முயற்சி என்றும் எந்த ஒரு அழுத்தத்திற்காகவும் தனது முடிவில் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது என்றும் அவர் உறுதிபட தெரிவிக்கின்றார்.
இந்தியாவின் தணிக்கைக் குழு விடுதலைப் புலிகளின் கொடியினை தாங்கி வெளிவரும் படைப்புகளை அனுமதிக்காது என்பது தெரிந்து கொண்டே தான் திரைப்படத்தை ஆரம்பித்தாக ஆனந்தமூர்த்தி கூறுகின்றார்.

thilipan
thilipan

புலிக்கொடியும் விடுதலைப் புலிகள் குறித்த பதிவுகளும் இல்லாமல் திலீபன் என்ற திரைப்படத்தை எடுப்பது எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதோடு அவ்வாறான ஒரு முயற்சியை தான் ஒருபோதும் மேற்கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

இந்திய தணிக்கை குழுவை தாண்டியும் இது உலகாளவிய ரீதியில் கவனத்தை பெறும் என்ற ஆனந்தமூர்த்தி நம்புகின்றார்.
இப்போது இருக்கின்ற நவீன தொடர்பாடல் யுகம் திரையரங்குகளுக்கு வெளியிலும் நல்ல படைப்புகளை வெற்றி பெற வைக்கும் தமிழர்களின் வீரம் செறிந்த வரலாற்றின் ஒரு பகுதியை இது உலகிற்கு எடுத்துச் சொல்லும் என்றும் அவர் நம்புகின்றார்.
இந்தியாவில் வெளியிட முடியாத ஒரு திரைப்படத்திற்கு தொடர்ந்து தன்னால் முதலிட முடியாது என இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் கைவிரித்து  விட 30 ஆண்டுக் கடந்தும் நிறைவேறாமலேயே இருக்கும் தீலீபனின் கோரிக்கை போல தீலீபனின் வரலாறும் முற்றுப் பெறாமல் தொக்கி நிற்கின்றது.

80 வீதமான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் குறித்த 12 நாள் காட்சிகளும் இன்னும் சில காட்சிளும் மட்டுமே மிச்சமிருக்கின்ற நிலையில் திலீபன் என்கின்ற வரலாற்று காவியம் காத்து நிற்கின்றது.

தமது முதலீட்டிற்கான பாதுகாப்பு இல்லாத நிலையில் இது போன்ற ஒரு முயற்சிக்கு ஆதரவளிப்பதும் இந்திய நலன்களை பகைத்துக் கொள்வதும் தமது வர்த்த முயற்சிகளுக்கு ஆபத்தானது என்பதால் இந்திய தணிக்கை குழுவை சமரசம் செய்யும் வகையிலான திருத்தங்களை மேற்கொண்டால் இந்த திரைப்படத்தை வெளியிட தாம் உதவி புரிவதாக புலம்பெயர் தமிழர்களின் பலம் பொருந்திய பெருவணிக நிறுவனங்கள் ஆனந்த மூர்த்தியிடம் பேரம் பேசியிருக்கின்றன.
ஆனால் அவ்வாறு சமரசம் செய்து இதனை ஒரு புனைவாக மாற்றுவதும் விடுதலைப் புலிகளின் அடையாளங்களை மறைத்தவாறு இந்த திரைப்படத்தை வெளியிடுவதும் திலீபனை மீண்டும் கொலை செய்வதற்கு ஒப்பானது என்பதால் அந்த பாவத்தை தான் ஒருபோதும் செய்ய முடியாது என அவர்களிடம் உறுதிபட கூறியதாகவும் ஆனந்தமூர்த்தி குறிப்பிடுகின்றார்.
இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளுக்கான செலவீனமாக இந்திய  மதிப்பில் ஒரு கோடி ரூபாவை தயாரிப்பாளர் எதிர்பார்கின்றார் எஞ்சிய காட்சிகளை எடுத்து திரைப்படத்தை முடிப்பதற்கு மேலும் இரண்டு கோடி இந்திய ரூபாய் தேவைப்படுகின்றது.

thilipan
thilipan

தனது படைப்பின் நியாயத்தையும் நேர்மையினையும் உணர்வதற்கு தான் இதவரை எடுத்து முடித்து தயார் செய்துள்ள பகுதிகளே போதுமானது என்றும் இந்த முயற்சியினை தொடர்வதற்கு விரும்புகின்றவர்கள் எப்போது வேண்டுமானாலும் அதனை பாரப்பதற்கும் தனது திரைக்கதையின் ஆளத்தை புரிந்த கொள்வதற்கும் தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

புலம்பெயர் தேசங்களில் இருந்து பல ஈழத்தமிழர்கள் இந்தியாவில் உருவாகும் வணிக ரீதியிலான திரைப்படங்களுக்கு முதலீடுகளை மேற்கொண்டு வரும் நிலையில் தமிழர்களின் வரலாற்றின் திருப்புமுனையாக மாறிநிற்கும் திலீபனின் வாழ்வையும் மரணத்தையும் பேசும் ஒரு முயற்சிக்கு எவருமே ஆதரவளிக்கவில்லை என்கின்ற ஆதங்கமும் வேதனையுமே ஆனந்தமூர்த்தியின் குரலில்; மிஞ்சிக் கிடக்கின்றது.
இது ஒரு வணிக முயற்சி அல்ல மாறாக ஒரு இனத்தின் வரலாற்றை பதிவு செய்த ஆவணப்படுத்தும் நோக்கம் கொண்ட படைப்பு. இந்த படைப்பினை வெளிக்கொண்டு வருவதன் மூலம் திலீபன் என்கின்ற ஒரு போராளியின் வாழ்வும் வரலாறும் மட்டுமல்ல மாறாக ஈழத் தமிழர்களின் போராட்ட வாழ்வும் அவர்களின் அரசியல் அபிலாசைகளும் அதன் மீது வல்லாதிக்க சக்திகள் மேற்கொண்டு வரும் அழிவுகளும் பதிவு பெறும் என்பதே   அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை.
தன் இனத்திற்காக 12 நாட்கள் நீராகரம் இன்றி தன் உயிரை சிறுகச் சிறுக மாய்த்துக் கொண்ட ஒரு மாவீரனுக்காக அவனின் இலட்சியங்களை அடையும் புனிதப் பயணத்திற்காக எம்மால் செய்யக் கூடியதெல்லாம் ஒன்று தான் அந்த மாவீரனின் மரணத்திற்கான காரணிகள் இன்றும் பசியோடு இருக்கின்றன என்பதை பதிவு செய்வது தான். அதனை நிறைவேற்றும் ஒரு முயற்சிக்கு எம்மால் என்ன செய்ய முடியும் என்பதை சிந்திப்பதும் அதை நோக்கி முதல் அடி எடுத்து வைப்பதுமே இந்த காலத்தின் கட்டயா தேவையாகின்றது.

(20 Sep 2017 கனடா இகுருவி பத்திரிகையில் வெளிவந்தது :ரமணன் சந்திரசேகரமூர்த்தி )


திலீபன் படத்தில் எடுக்கப்பட காட்சிகள் சில….

thilipan
thilipan

thilipan
thilipan

thilipan
thilipan

thilipan
thilipan

thilipan
thilipan

thilipan
thilipan

thilipan
thilipan

thilipan
thilipan

thilipan
thilipan

thilipan
thilipan

thilipan
thilipan

thilipan
thilipan

thilipan
thilipan

thilipan
thilipan

Share This Post

Post Comment