வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் – 13 பேர் பலி

ekuruvi-aiya8-X3

gunmen-attackபாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்குட்பட்ட பெஷாவர் நகரில் அரசுக்கு சொந்தமான வேளாண்மை பல்கலைக்கழகம் உள்ளது. முஹம்மது நபியின் பிறந்தநாள் என்பதால் இந்த பல்கலைக்கழகத்துக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், புர்கா அணிந்தபடி இந்த பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த 4 தீவிரவாதிகள் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டனர். இந்த திடீர் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 15 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

தாக்குதல் நடத்திய 4 பேரையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதாகவும் அந்த செய்திகள் குறிப்பிடும் நிலையில் இச்சம்பவத்துக்கு தெஹ்ரிக்-இ-தலிபான் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தங்களது தாக்குதலின் இலக்கு பல்கலைக்கழகம் அல்ல என்றும் அருகாமையில் உள்ள பாகிஸ்தான் உளவுத்துறை அலுவலகத்தை நடந்த முயற்சி என்றும் தெஹ்ரிக்-இ-தலிபான் வெலியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment