தேவைப்பட்டால் மீண்டும் சில மணி நேரங்களில் சிரியாவில் படைகளை குவிக்க முடியும்: ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை

pudinசிரியாவின், தற்போதைய அதிபர் பஷார் அல்-ஆசாத் ஷியா பிரிவைச் சேர்ந்தவர். அவருக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அல்-காய்தா ஆதரவு தீவிரவாத குழுக்கள் போரிட்டு வருகின்றன. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படைகள் சிரியா, ஈராக்கில் கடந்த பல மாதங்களாக தாக்குதல் நடத்தி வந்தன. ஆனால் சிரியா அதிபர் ஆசாத்துக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்க வில்லை. அவர் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து நெருக்கடி அளித்து வருகிறது.

அதனால், சிரிய அரசு ஆதரவு படைகளுக்கு ஆதரவாக ரஷ்ய படைகள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தாக்குதலில் ஈடுபட்டு வந்தன. இதனையடுத்து, சிரியாவில் இருந்து ரஷ்ய படைகளை திரும்ப பெற வேண்டும் என்று அதிபர் புடின் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டார். என்ன நோக்கத்திற்காக சிரியாவில் படைகள் குவிக்கப்பட்டதோ அது நிறைவேறியுள்ளதாக புடின் தெரிவித்தார்.

இந்நிலையில், தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக தேவைப்பட்டால் ஒரு மணி நேரத்திற்கு சிரியாவில் ரஷ்ய படைகளை குவிக்க முடியும் என்று அதிபர் விளாதிமீர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிரியாவில் இருந்து திரும்பி வந்த ரஷ்ய படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய புடின், ரஷ்ய படைகள் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் தங்களது பொறுப்புணர்ச்சியையும், தலைமை பண்பையும் வெளிப்படுத்தியுள்ளதாக கூறினார்.

ரஷ்ய வான்வெளி விமானப்படைகள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் சுமார் 9,000 போர் பயணங்களை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

ஐ.எஸ் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த பால்மைரா பகுதியில் சிரிய ராணுவ படை தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று கூறிய அவர், சிரியாவின் இறையான்மைக்கு தீங்கு விளைவிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்றார்.

ஐ.எஸ் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த பால்மைரா பகுதியில் சிரிய ராணுவ படை தாக்குதல் நடத்தி வருகின்றனர். சிரியாவின் இறையான்மைக்கு தீங்கு விளைவிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்றும் அவர் கூறினார்.

முன்னதாக சிரியாவில் நடைபெற்று வரும் உள் நாட்டு போரில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Related News

 • சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து 22 பேர் சிக்கினர்
 • தைவானில் ரயில் தடம் புரண்டு விபத்து – 18 பேர் பலி
 • நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர் காலமானார்
 • காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை
 • அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் தலையீடு – ரஷிய பெண் மீது வழக்குப்பதிவு
 • ஜமால் கசோக்கி 2 மூத்த அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்- சவுதி அரேபியா ஒப்புதல்
 • பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு
 • பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ருசிகரமாக பதில்களை அளிக்கும் சோபியா ‘ரோபோ’
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *