அசாமில் கரைபுரண்ட வெள்ளத்திலும் தேசியக்கொடி ஏற்றிய மாணவர்கள்

ekuruvi-aiya8-X3

Assam-Flood-Students-hoisted-national-flagஅசாம் மாநிலத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.

இதனால் அங்குள்ள 25 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 35 லட்சம் பேர் மழைக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அம்மாநிலத்தில் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

லட்சக்கணக்கான வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் மழை தண்ணீர் புகுந்துள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானங்கள் மூலம் உணவு பொட்டலங்கள் போடப்பட்டு வருகிறது. தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் அந்த மாநிலத்தில் முகாமிட்டு மீட்புப் பணிகளை செய்து வருகிறார்கள்.

கிராமங்களில் தண்ணீரில் தத்தளிக்கும் பெண்கள், குழந்தைகளை ராணுவத்தினர் படகுகள் மூலம் மீட்டு வருகிறார்கள். இதனால் சுதந்திர தினமான நேற்று அம்மாநிலத்தில் பல மாவட்டங்களில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் நடத்தப்படவில்லை.

Assam-1._L_styvpfஇந்த நிலையில் அசாமில் பள்ளிக்கூடம் ஒன்றில் மழைத் தண்ணீர் வெள்ளம் போல தேங்கி நிற்பதை பொருட்படுத்தாமல் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடிய சம்பவம் நாடெங்கும் உள்ள மக்களிடம் மிகுந்த உணர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அசாமில் உள்ள ஒரு குக்கிராமத்தில் அந்த பள்ளி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி ஆசிரியர்கள் இருவர் இடுப்பளவு தண்ணீரில் நிற்க, இரண்டு சிறுவர்கள் கழுத்து வரை தண்ணீரில் நின்றபடி தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்துகிறார்கள். அந்த சிறுவர்களின் தேசப்பற்று இணையத்தள பிரியர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவர்களது படம் நேற்று இணையத்தளங்களிலும், வாட்ஸ்-அப் தகவல் பரிமாற்றங்களிலும் வைரலாகப் பரவியது. லட்சக்கணக்கானவர்கள் அந்த படத்தைப் பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Share This Post

Post Comment