ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி இருக்கும் வரை குடும்ப ஆட்சி இல்லை – ரணில்

ekuruvi-aiya8-X3

Ranil_Vikkiநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி இருக்கும் வரையில், நாட்டில் குடும்ப ஆட்சியையும், ஏகாதிபத்தியத்தையும் ஏற்படுத்த முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பொரளையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மேதின கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது ஐக்கிய தேசிய கட்சியை அழிப்பதற்கான முயற்சிகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். மக்களுக்கு தற்போது இரண்டு தெரிவுகள் இருக்கின்றன.

முழு நாடாளுமன்றத்தையும் அரசாங்கமாக மாற்றி, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதா? அல்லது ஐக்கிய தேசிய கட்சியை அழிப்பதற்கு ஆதரவளிப்பதா?

ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் ஊழல்களுக்கோ, ஏகாதிபத்தியத்துக்கோ, குடும்ப ஆட்சிக்கோ இடமில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஐக்கிய தேசிய கட்சி ஒற்றுமையை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே இவ்வாறான சிலர் கட்சியை அழிக்கும் முயற்சியை மேற்கொள்கின்றனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

Share This Post

Post Comment