தேர்தலில் வெற்றி பெற்றால் தெரசா மே கொண்டு வந்த பிரெக்சிட் திட்டத்தை ரத்து செய்வோம்

Labour-party98பிரிட்டன் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால், அரசு கொண்டு வந்துள்ள பிரெக்சிட் திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய பிரெக்சிட் கொள்கையை வகுப்பதாக தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் கடந்த 2015-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக் காலம் 2020ல் முடிவடைகிறது. ஆனால், பதவிக்காலம் முடியும் முன்னரே, அதாவது ஜூன் 8-ம் தேதி பொதுத்தேர்தலை நடத்த பிரதமர் தெரசா மே முடிவு செய்து நேற்று அறிவிப்பை வெளியிட்டார்.

நாட்டில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வருவதற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவதுதான் ஒரே வழி என்பதால் இந்த முடிவுக்கு வந்ததாக கூறினார். இதையடுத்து, பொதுத் தேர்தலை ஜூன் 8-ம் தேதி நடத்த அனுமதி அளிக்கும் தீர்மானமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் பிரெக்சிட் தொடர்பான அரசியல் அழுத்தங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதற்கு ஸ்காட்லாந்து சுயாதீனமாக ஒரு பாதையை வகுக்கத் தொடங்கி உள்ள நிலையில், பிரதமரின் இந்த தேர்தல் அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில், பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால், தற்போதைய பிரதமர் தெரசா மே கொண்டு வந்த பிரெக்சிட் திட்டத்தை ரத்து செய்துவிடுவோம் என்று பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது. அத்துடன், பிரெக்சிட் தொடர்பான புதிய திட்டத்தையும் வெளியிட்டுள்ளது.

பிரெக்சிட் விஷயங்களைக் கையாளும் தொழிலாளர் கட்சியின் நிழல் மந்திரி கீர் ஸ்டார்மர், லண்டனில் நேற்று (25)பேசும்போது, இதனைத் தெரிவித்தார்.

‘வரும் பொதுத் தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால், தற்போதைய அரசாங்கம் கொண்டு வந்த பிரெக்சிட் வெள்ளை அறிக்கையை நாங்கள் நீக்குவோம். பின்னர், நாங்கள் ஏற்கனவே பரிந்துரைத்த 6 முக்கிய விஷயங்களை பிரதிபலிக்கும் வகையிலான பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய பிரெக்சிட் கொள்கை உருவாக்கப்படும். பிரிட்டனில் வசிக்கும் மற்றும் பணியாற்றும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதே இந்த கொள்கையின் முக்கிய அம்சமாக இருக்கும்.’ என்றார் ஸ்டார்மர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற நாடுகளைச் சேர்ந்த சுமார் 30 லட்சம் பேர் பிரிட்டனில் வசிப்பதாகவும், பிரிட்டனைச் சேர்ந்த 12 லட்சம் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற நாடுகளில் வசிப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.


Related News

 • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
 • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
 • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
 • காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு
 • சோமாலியாவில் குண்டுவெடிப்பு; துப்பாக்கிச்சூடு – 20 பேர் கொன்று குவிப்பு
 • அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்தால் தஞ்சம் கோர முடியாது – டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
 • ஐரோப்பாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைக்கு உதவ தயார் – டிரம்ப்
 • அமெரிக்க மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவுகிறது – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *