தேர்தல் அரசியலுக்கான ஒற்றுமையும் கொள்கை அரசியலுக்கான ஒற்றுமையும்

IMG_1180

சம்பந்தன் ஏன் திடிரென்று ஒற்றுமை தொடர்பில் அலட்டிக் கொள்கின்றார்? ஏன் கூட்டமைப்பின் அனைத்து அரசியல் தலைவர்களும் விக்கினேஸ்வரனின் நிகழ்வில் பங்குகொண்டனர்?

கடந்த 24ம் திகதி யாழ்ப்பாணத்தில் ,இடம்பெற்ற நூல் வெளியீடு ஒன்று தமிழ் தேசிய அரசியல் பரப்பில் அதிக கவனத்தை பெற்றிருக்கிறது. வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆற்றிய உரைகளை தொகுத்து ‘நீதியரசர் பேசுகின்றார்’ என்னும் தலைப்பில் வெளியீடு செய்திருந்தனர். இந்த வெளியீட்டின் போது சிறப்பு விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும் ,ரா.சம்பந்தன் பங்குபற்றியிருந்தார். வழக்கத்து மாறாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகிய அனைவரும் விக்கினேஸ்வரனின் நிகழ்வில் பங்குகொண்டிருந்தனர். நீண்ட நாட்களுக்கு பின்னர் கூட்டமைப்பின் அனைத்து தலைவர்களும் ஒரு நிகழ்வில் ஒற்றுமையாக பங்கு கொண்டிருந்தனர். இந்த வழக்கத்துக்கு மாறான நடவடிக்கையின் விளைவாகத்தான், குறித்த நிகழ்வு அதிக கவனத்தை பெற்றிருந்தது. அதாவது கூட்டமைப்பிலுள்ளவர்கள் அனைவரும் ஒரிடத்தில் பங்குகொள்வதையே ஆச்சரியமாகப் பார்க்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. உண்மையில் இது ஆச்சரியத்துக்குரியதல்ல மாறாக கவலைப்பட வேண்டிய ஒன்று. மக்களால், நம்பிக்கையுடன் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஒரு நிகழ்வில் பங்குகொள்வதையே மக்கள் ஆச்சரியமாகப் பார்க்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்வில் பேசிய சம்பந்தன் வழமையான அலட்டலோடு ஒற்றுமை பற்றி வகுப்பெடுத்திருந்தார். நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எங்களுக்குள் கருத்து பேதங்கள் இருக்கலாம் ஆனாலும் ஒற்றுமை முக்கியம். நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் அழிந்து போய்விடுவோம் – என்றெல்லாம் ஆக்கோரசமாக பேசியிருந்தார். விக்கினேஸ்வரனின் மேடையில் சம்பந்தன் கூறிய ஒற்றுமை என்பது, விக்கினேஸ்வரனை இலக்கு வைத்தே கூறப்பட்டது என்பதை விளங்கிக்கொள்ள சிரமப்பட வேண்டியதில்லை. இதனை தெரிவிப்பதற்காகவே வந்தவர் போலவே சம்பந்தனின் பேச்சு அமைந்திருந்தது.

சம்பந்தனின் பேச்சுக்கு விக்கினேஸ்வரன் அதே மேடையிலேயே பதிலளித்திருந்தார். உண்மையில் விக்கினேஸ்வரன் உரைகளை எழுதி வாசிக்கும் பழக்கமுள்ளவர். எனவே அதனை சம்பந்தனின் உரைக்கான பதில் என்று சொல்ல முடியாது. சம்பந்தன் அப்படித்தான் பேசுவார் என்பதை முன் கூட்டியே உணர்ந்து அதற்கு ஏற்றவாறான பதிலுடன் அவர் இருந்திருக்கின்றார்.

ஒற்றுமை அவசியம் ஆனால் அது கொள்கை அடிப்படையில் இருக்க வேண்டும் மாறாக ஒற்றுமைக்காக கொள்கையை கைவிட்டுச் செல்ல முடியாது. மக்களுக்கு நாம் வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில்தான் நாம் பயணிக்க வேண்டும். உயரிய கொள்கையை கடைப்பிடித்து அவற்றின் அடிப்படையில் சுயநலம் களைந்து முன்னேறுவதே இன்று தமிழ் மக்களுக்குள்ள ஒரேயொரு அரசியல் பாதையாகும். அதே வேளை சம்பந்தனே தன்னை அரசியலுக்கு கொண்டு வந்ததாகவும் எனவே கொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை என்றும் விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்தார். அதே வேளை இப்போதும் கூட்டமைப்புக்கு விசுவாசமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்த இந்தக் கருத்தை மட்டுமே சிலர் எடுத்துக் கொண்டனர். ,தன் மூலம் விக்கினேஸ்வரன் தொடர்ந்தும் கூட்டமைப்புக்குள்தான் இருப்பார் எனவே தங்களுக்கிடையில் எந்தவொரு முரண்பாடும் இல்லை என்றவாறு காண்பிப்பதற்கு குறித்த நூல் வெளியீட்டு நிகழ்வை தமிழரசு கட்சியினர் பயன்படுத்திக்கொள்ளக் கூடும்.

உண்மையில் சம்பந்தன் பேசும் ஒற்றுமை அர்த்தமற்ற ஒன்று. ஏனெனில் இன்று அவ்வாறானதொரு ஒற்றுமை  இல்லாமல் போனமைக்கு காரணமானவரும் சம்பந்தன்தான். 2009 ,ற்கு பின்னர் அவ்வாறானதொரு ஒற்றுமைக்கான அனைத்து வாய்ப்புக்களையும் கூட்டமைப்பே கொண்டிருந்தது. அதனை பேணிப் பாதுகாப்பதற்கான தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய சந்தர்ப்பமும் சம்பந்தனுக்கு கிடைத்தது. கூட்டமைப்பிற்கென்று ஒரு கட்டமைப்பு தேவை. வீட்டுச் சின்னத்தை ஒரு பொதுச் சின்னமாகக் கொண்டு கூட்டமைப்பை தனியானதொரு கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என்றெல்லாம் சம்பந்தனுக்கு பலரும் ஆலோசனை வழங்கியிருந்தனர். ஆனால் சம்பந்தனோ அவற்றை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஆனால் இன்று அதே சம்பந்தன் தான் ஒற்றுமை பற்றி வகுப்பெடுக்கின்றார்.

விக்கினேஸ்வரன் தனதுரையில் தமிழ் மக்களின் அரசியல் இன்று பரிதாபகரமான நிலையில் இருக்கின்றது என்று குறிப்பிடுகின்றார். அவ்வாறாயின் அதற்கான பொறுப்பை அவர் எவர் மீது சுமத்துகின்றார். சம்பந்தன் மீதுதானே! சம்பந்தன் சரியானதொரு தலைமைத்துவத்தை வழங்கியிருந்தால் அவ்வாறானதொரு பரிதாபகரமான நிலைமை ஏற்பட்டிருக்காது என்றும் புரிந்து கொள்ளலாம் அல்லவா?

சம்பந்தன் ஏன் திடிரென்று ஒற்றுமை தொடர்பில் அலட்டிக் கொள்கின்றார்? ஏன் கூட்டமைப்பின் அனைத்து அரசியல் தலைவர்களும் விக்கினேஸ்வரனின் நிகழ்வில் பங்குகொண்டனர்?

நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் கூட்டமைப்பின் வாக்கு வங்கி கணிசமாக சரிவடைந்தது. அவ்வாறானதொரு முடிவை சம்பந்தன் எதிர்பார்க்கவில்லை. கூட்டமைப்பின் வாக்கு வங்கி கணிசமாக வீழ்ச்சியடைந்த அதே வேளை கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வாக்கு வங்கி கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதே வேளை மத்திய அரசாங்கத்தின் முகவர்கள் என்று வர்ணிக்கப்படும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செல்வாக்கிலும் கணிசமான அதிகரிப்பு காணப்படுகிறது. அத்தோடு தெற்குமைய சிங்கள கட்சிகளின் செல்வாக்கும் அதிகரித்திருக்கிறது. உண்மையில் இவை அனைத்துமே கூட்டமைப்பின் வீழ்சிக்கான குறிகாட்டிகள்தான்.

விக்கினேஸ்வரன் கொள்கை அடிப்படையில் கூட்டமைப்பின் அரசியல் அனுகுமுறைகளை தொடர்ச்சியாக விமர்சித்து வந்தமையும் ,தற்கொரு காரணம் என்று சம்பந்தன் கணிக்கின்றார். ஒரு வேளை விக்கினேஸ்வரன் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரங்களில் பங்கு கொண்டிருந்தால், நிச்சயமாக முன்னணியினரால் தற்போது பெற்றிருப்பது போன்று வாக்குகளை பெற்றிருக்க முடியாது. அவ்வாறு சம்பந்தன் கணிப்பாரானால் அது சரியானதொரு கணிப்புத்தான். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், அன்மைக்காலமாக விக்கினேஸ்வரன் தனித்துச் செல்லலாம் என்னும் கருத்து வலுப்பெற்று வந்தது.

கூட்டமைப்பிலிருந்து பிரிந்து நிற்பவர்களையும் கொள்கை ரீதியில் உடன்படக் கூடிய இன்னும் பலரையும் சேர்த்துக் கொண்டு விக்கி தனி வழியில் செல்லலாம் என்னும் கருத்தொன்றும் அங்கும் , இங்குமாக உலவியது. ஒரு வேளை விக்கி தனிவழியில் செல்வாரானால் அதன் மூலம் உடனடியாக பாதிக்கப்படப் போவது சம்பந்தன்தான். சம்பந்தன் தற்போது தமிழ் மக்களின் தலைவராகவே அறியப்படுகிறார். அவர் அவ்வாறு , இருக்கின்றாரா அல்லது இல்லையா என்னும் கேள்வியை ஒரு புறமாக வைத்துக் கொள்வோம். ஆனால் அவ்வாறானதொரு தோற்றம் அவருக்குண்டு. ஆனால் விக்கினேஸ்வரன் கொள்கை நிலையில் உறுதியாக தன்னை வெளிப்படுத்தியதால் சம்பந்தனின் தலைவர் என்னும் தகுதிநிலை சற்று கேள்விக்குள்ளாகியது. விக்கினேஸ்வரன் கொள்கை நிலையில் காண்பித்த உறுதியாதால்தான் தமிழரசு கட்சி அவருக்கு எதிராகத் திரும்பியது. அவரை இரவோடு இரவாக வடக்கு முதலமைச்சர் பதவியிலிருந்து அகற்ற முயற்சித்தது. இந்த விடயங்களை எல்லாம் மறந்துவிட்டுத்தான் தற்போது சம்பந்தன் ஒற்றுமை பற்றிப் பேசுகின்றார்.

சம்பந்தனுக்கு தற்போதுள்ள தலையிடி ஒன்றே ஒன்றுதான். அதாவது, ஒரு வேளை விக்கினேஸ்வரன் கூட்டமைப்பிலிருந்து முற்றிலுமாக விலகிச் செல்வாராயின் சம்பந்தனின் தலைவர் தகுதிநிலை கேள்விக்குள்ளாகும். அதே வேளை எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பிற்கு அல்லது தமிழரசு கட்சி நிறுத்தும் வேட்பாளரை எதிர்த்து விக்கினேஸ்வரன் களமிறங்குவாராயின் தமிழரசு கட்சியின் ஆதிக்கம் பெரியளவில் வீழ்ச்சியுறும்.

இந்த விடயங்கள் அனைத்தையும் ஆராய்து பார்த்ததன் விளைவுதான் சம்பந்தனின் ஒற்றுமை பற்றிய பிரசங்கம். விக்கினேஸ்வரன் நாளை என்ன முடிவெடுப்பார் என்பது பற்றி இப்போது எந்தவொரு ஆருடமும் கூற முடியாது ஆனால் அவர் வலியுறுத்தும் கொள்கை வழி ஒற்றுமையே இன்றைய நிலையில் தேவையானது. வெறுமனே தேர்தல் என்றதும் கொள்கை பற்றி பேசுவதும் பின்னர் தேர்தல் முடிந்ததும் நீ யாரோ நான் யாரோ என்பது போல் பேசுவதும் வெறும் சுயநல அரசியலின் வெளிப்படாகும். மேற்படி நூல் வெளியீட்டில் சம்பந்தன் பேசிய ஒற்றுமை என்பது அந்த வகையான ஒன்றுமைதான். ஆனால் விக்கினேஸ்வரன் பேசும் ஒற்றுமையே ,ன்றைய சூழலில் தமிழ் மக்களுக்குத் தேவையானது.

சம்பந்தனுக்கு உண்மையிலேயே கொள்கை வழியான ஒற்றுமையில் நம்பிக்கையிருந்தால், அதற்கான முயற்சிகளை செய்வதற்கு இப்போதும் அவகாசம் உண்டு. அனைவரையும் உள்ளவாங்கி கூட்டமைப்பை பலப்படுத்த முடியும். அவ்வாறானதொரு இலக்கை நோக்கி முன்னகர வேண்டுமாயின், அதற்கு முதலில் சம்பந்தன் தனது சுயநலத்தை களைய வேண்டும். தமிழரசு கட்சியை மட்டுமே சுமந்து செல்லும் மனோபாவத்திலிருந்து விடுபட வேண்டும். சம்பந்தனின் அரசியல் காலம் முடிவதற்கு முன்னர் நமது அடுத்த தலைமுறையிடம் சரியானதொரு தேசியக் கட்டமைப்பை விட்டுச் செலவதற்கான வாய்ப்பு இப்போதும் பிரகாசமாகவே உள்ளது. ஒரு தலைமை தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் கூட்டத்திடம் எதனை விட்டுச் செல்கின்றது என்பதுதான் அந்த தலைமையின் கனதியாகும். சம்பந்தனின் கனதி என்ன என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும்.

இகுருவிக்காக யதீந்திரா


Related News

 • அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!
 • விக்னேஸ்வரனும் நவக்கிரகங்களும்
 • நான்கு தமிழர்கள் டொரோண்டோ ,மார்க்கம் கல்விச்சபைகளில் வெற்றி
 • உளுக்கு, சுளுக்கு, வாதம்
 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *