ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி.தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

dinakaranஆர்.கே.நகர் தொகுதிக்கு இந்த மாதம் 21-ம் திகதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்களில், ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 885 வாக்குகள் பதிவானது. இது ஒட்டு மொத்தமாக 77.5 சதவீத வாக்குப்பதிவாகும்.

தேர்தலில் போட்டியிட்ட டி.டி.வி தினகரன் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில், அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுக்கு இடையே குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் சுமார் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் தி.மு.க. உள்பட 57 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ராணி மேரி கல்லூரியில் இன்று அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விவரம் வருமாறு:

சுயேச்சை – தினகரன்: 89, 013
அ.தி.மு.க. – மதுசூதனன்: 48,306
தி.மு.க. – மருதுகணேஷ்: 24,651
நாம் தமிழர் – கலைக்கோட்டுதயம்: 3,802
நோட்டா: 2,348
பா.ஜ.க. – கரு. நாகராஜன்: 1,368

கடந்த 2016-ம் ஆண்டில் ஜெயலலிதா போட்டியிட்டு 39,545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், இந்த முறை சுயேட்சையாக களமிறங்கிய தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பதிவான வாக்குகளில் 50.32 சதவீதம் வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட டி.டி.வி. தினகரன் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு விசில் அடித்து சாதித்து காட்டி உள்ளார். இந்த வெற்றியின் மூலம் தமிழக அரசியல் களத்தில் புதிய தலைவராகவே தினகரன் அவதாரம் எடுத்துள்ளார் எனலாம்.


Related News

 • நாடு மக்களால் நடத்தப்படுகிறது; ஒரு மனிதரால் அல்ல என்பது கூட பிரதமர் மோடிக்கு தெரியாது – ராகுல் காந்தி
 • சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
 • அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை
 • கஜா புயல் – 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
 • சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் – மதியம் 2 மணிவரை 37.61 சதவீத வாக்குகள் பதிவு
 • சபரிமலை சம்பவம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு முடிவு
 • பா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பரபரப்பு பதில்
 • கஜா புயல் எதிரொலி – 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *