முதலாம் உலகப்போர் நினைவஞ்சலி விழாவில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே

முதலாம் உலகப்போரின் நினைவஞ்சலி நிகழ்வில் இன்று பிரித்தானிய பிரதமர் தெரேசா மே கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

பெல்ஜியத்தில், மரணித்த ராணுவவீரர்களின் உடல் அடக்கம்செய்யப்பட்ட இடத்தில் இன்று நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் முதலாம் உலகப்போரில் போராடிய முதல் மற்றும் கடைசி பிரித்தானிய வீரர்களின் கல்லறைகளில் பொப்பி மலர்வளையங்களை வைத்துஅவர் அஞ்சலி செலுத்தினார்.

1914 ஆம் ஆண்டில் முதலாம் உலகப்போர் முடிவுக்குவந்த நாளில் கொல்லப்பட்ட முதல் பிரித்தானிய வீரரான ஜோன் பார் மற்றும் கடைசி வீரரான ஜோர்ஜ் எலிசன் ஆகியோரின் கல்லறைகளிலேயே பிரதமர் மலர்வளையங்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் தெரேசா மே-யும் பெல்ஜிய பிரதமர் சார்லஸ் மைக்கேலும் விருந்து ஒன்றில் கலந்து கொண்டு பிரித்தானிய மற்றும் பெல்ஜிய ராணுவப் படைகளின் உறுப்பினர்களை சந்திப்பார்களெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் பிரான்சின் சோமே பிராந்தியத்தில் அமைந்துள்ள அல்பேர்ட் நகருக்கு விஜயம்செய்யவுள்ள பிரதமர் அங்கு பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனையும் சந்திக்கவுள்ளார். இந்நகரம் முதலாம் உலகப்போரின்போது கணிசமான குண்டுவீச்சினால் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் தெரேசா மேயும் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் தியெப்வால் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வொன்றில் கலந்துகொள்வார்களெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

 • சிங்கப்பூரில் இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை
 • இலங்கையில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் – சீனா நம்பிக்கை
 • பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு நேரடி ஆதாரம்?
 • சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 4.3 லட்சம் சைபர் தாக்குதல்களை இந்தியாவில் நடத்தி உள்ளன
 • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
 • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
 • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
 • காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *