துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தேரர் விமானம் மூலம் கொழும்புக்கு

ekuruvi-aiya8-X3

therar-14துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி கோபவக தம்மிந்த தேரர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மாலை விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

கதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி கோபவக தம்மிந்த தேரர் உட்பட இரண்டு தேரர்கள் மீது நேற்று (12) இரவு 11 மணியளவில் இனந் தெரியாத மூன்று நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

சம்பவத்தின் சந்தேகநபர்களை கைது செய்வதற்காக 04 பொலிஸ் குழுக்களும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் இணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற UP – CAG-8531 என்ற இலக்கமுடைய ஹொண்டா வெஸல் வகையைச் சேர்ந்த ஜீப் வண்டி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment