ஹிட்லர் ஆட்சி குறித்த கருத்துக்கு விளக்கமளித்த தேரர்

Facebook Cover V02

THERமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற மத அனுஷ்டான நிகழ்வில் தான் தெரிவித்த கருத்து தொடர்பில் அஸ்கிரி பீட துணை தலைவர் வெடருவே உபாலி தேரர் விளக்கமளித்துள்ளார்.

நாட்டை ஆட்சி செய்யும் போது நேரடியான கொள்கை இருக்க வேண்டும் என்றும் ஹிட்லர் போன்று மனிதர்களை கொலை செய்து ஆட்சி செய்ய வேண்டும் என்று அர்த்தப்பட தான் கூறவில்லை என்றும் வெடருவே உபாலி தேரர் விளக்கமளித்துள்ளார்.

இன்று அவர் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

தன்னுடைய நீண்ட உரையை சுருக்கி ஒரு வசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு முழுமையாக அர்த்தப்படுத்துவது தவறாகும் என்றும், இது தொடர்பில் முக்கிய அரசியல் தலைவர்கள் விமர்சிப்பது வருத்தமளிப்பதாகவும் அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லர் போன்று இராணுவ ஆட்சியை கொண்டுவந்தாவது இலங்கையைக் கட்டியெழுப்புமாறு அண்மையில் வெடருவே உபாலி தேரர் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வௌியாகியிருந்தமை கூறத்தக்கது.

Share This Post

Post Comment