இலங்கைத் தேயிலைக்கான தடையை நீக்கியது ரஷ்யா

malaiyakaஇலங்கைத் தேயிலையை இறக்குமதி செய்ய ரஷ்யாவினால் விதிக்கப்பட்ட தடை டிசம்பர் 30ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் இதனைக் கூறியுள்ளார்.

இருதரப்பு பிரதிநிதிகளுக்கிடையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் தடையை நீக்குவதற்கு ரஷ்ய அரசாங்கம் இணக்கம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும் தேயிலை கொள்வனவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிபால மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் ஆகியோருக்கு இடையிலான ராஜதந்திர உறவுகள் இந்த தடைகளை நீக்கிக் கொள்ள விசேடமாக உதவியதாக தூதுவர் சமன் வீரசிங்க தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி தடையை நீக்கிக் கொள்ளும் நோக்கிலான கடிதம் ஒன்றை ரஷ்ய ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

Share This Post

Post Comment