பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது

ekuruvi-aiya8-X3

parliment_16பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 3–வது வாரம் தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டதால் இது தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது குஜராத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

காலையில் பாராளுமன்றம் கூடியதும் பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் உறுப்பினர் சுனில்குமார் ஜாகர், எம்.பி.யாக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பிரதமர் மோடி கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் நடந்த மந்திரி சபை மாற்றத்தின் போது புதிதாக இணைக்கப்பட்ட மந்திரிகள் மற்றும் இலாகா மாற்றியமைக்கப்பட்ட மந்திரிகளை பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

இதைப்போல கடந்த 1–ந்தேதி நியமிக்கப்பட்ட புதிய பாராளுமன்ற செயலாளர் சினேகலதா ஸ்ரீவத்சவாவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சபைக்கு அறிமுகம் செய்து வைத்தார். பாராளுமன்ற முதல் பெண் செயலாளரான சினேகலதாவின் பணி அனுபவங்களையும் அவர் பாராட்டினார்.

மறைந்த எம்.பி.க்களான சுல்தான் அகமது, சந்த் நாத், தஸ்லீம் உத்தின் ஆகியோருக்கும், 7 முன்னாள் உறுப்பினர்களுக்கும் பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பாராளுமன்றத்தை 18–ந்தேதிக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.

Share This Post

Post Comment