எடப்பாடி பழனிசாமி, தினகரன், 4 அமைச்சர்கள் மீது வழக்கு தொடர தேர்தல் கமிஷன் உத்தரவு

ekuruvi-aiya8-X3

Election_Commission_Indiaசென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது.

பிரசாரத்தின் போது, தேர்தல் அதிகாரிகளின் கண்காணிப்பையும் மீறி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இடைத்தேர்தலை தேர்தல் கமிஷன் ரத்து செய்தது.

இந்த பிரச்சினை தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 4 அமைச்சர்கள் மற்றும் அந்த தொகுதியில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு இருக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Share This Post

Post Comment