தாயகம் திரும்பினார் ஜனாதிபதி

sdsd

maithiriஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் இருந்து இன்று நாடு திரும்பியுள்ளார்.

பிற்பகல் 04.25க்கு அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

கோவாவில் நடைபெற்ற ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில் இலங்கை பங்கேற்க சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி, நேற்றையதினம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, மீனவர்கள் பிரச்சினை உட்பட பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதித்தனர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் சொரூப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

இந்தியாவுக்கு வந்துள்ள சிறிசேனவை மோடி வரவேற்று, மாநாட்டில் பங்கேற்கும்படி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கு நன்றியும் தெரிவித்தார்.

எரிசக்தி, சுகாதாரம் உட்பட அனைத்து பிரிவுகளிலும் இரு நாடுகளின் கூட்டுறவு பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது இலங்கை ஜனாதிபதி, நீண்டகாலமாக தொல்லையளிக்கும் பிரச்சினையாக இருந்துவரும் மீனவர்கள் பிரச்சினைக்கு ஒரு உறுதியான, நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பிரதமர் மோடியும், நாம் நீண்டகாலமாக உள்ள இந்த இக்கட்டான பிரச்சினைக்கு ஒரு சரியான தீர்வை காண்போம் என்று கூறினார். இதற்காக இலங்கை மீன்வளத்துறை அமைச்சருக்கு இந்தியா வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அப்போது நடைபெறும் பேச்சுவார்த்தையில் இருதரப்பும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு முடிவு எட்டப்படும் என்று நம்புகிறோம்.

காஷ்மீர் உரியில் நடந்த தாக்குதலின்போது இந்தியாவுக்கு தனது ஆதரவை தெரிவித்த இலங்கை மக்களுக்கும், இலங்கை அரசுக்கும் மோடி நன்றி தெரிவித்தார். இந்த தாக்குதலுக்கு பின்னர், பிராந்திய மக்கள் அனைவரும் அமைதியையே விரும்புகிறார்கள் என்பதையும், அமைதிக்கும், வளத்துக்கும் மிகப்பெரிய சவாலாக இருப்பது பயங்கரவாதம் தான் என்பதையும் இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் ஒற்றுமையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது என்றார்.

அதற்கு மைத்திரிபால சிறிசேன பயங்கரவாதத்தின் அனைத்து வகைகளையும், அவற்றின் கொள்கைகளையும் இலங்கை எதிர்ப்பதாக கூறினார். மேற்கு, தெற்கு மாகாணங்களுக்கு ஆம்புலன்சுகள் வழங்கியதற்காக மோடிக்கு நன்றி தெரிவித்ததுடன், மற்ற பகுதிகளுக்கும் இது விரிவாக்கப்படும் என்று நம்புவதாகவும் கூறினார்.

இலங்கையில் வடக்கு மாகாணத்தில் நடைபெற்றுவரும் மறுசீரமைப்பு திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்தும் மோடிக்கு இதன்போது இலங்கை ஜனாதிபதி விளக்கமளித்தார், என்றார் விகாஸ் சொ

Share This Post

Post Comment