தற்கொலை செய்து கொண்ட அதிகாரியின் சடலத்தை தோண்டி எடுக்க உத்தரவு

Thermo-Care-Heating

ethirsinkaஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொன்றது தானே என, கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் எதிரிசிங்க ஜெயமான்னவின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்கிசை நீதவான் மொஹமட் சகாப்தீனால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய, கேகாலை நீதவான் கிஹான் மீகஹகேவின் முன்னிலையில் சடலத்தை தோண்டி எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 14ம் திகதி உயிரிழந்த ஜெயமான்னவின் சடலம் கேகாலை – புவத்தெனிய மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இராணுவப் புலனாய்வு பிரிவின் முன்னாள் அதிகாரி எழுதி வைத்துள்ள கடிதம் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் தற்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ள, இராணுவப் புலனாய்வு பிரிவின் அதிகாரி பிரேமானந்த உதலாகமவை விடுதலை செய்யுமாறும், தான் எழுதி வைத்துள்ள கடிதத்தை புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்புமாறும் குறித்த கடிதத்தில் ஜெயமான்ன கூறியுள்ளார்.

இதுஇவ்வாறு இருக்க ஜெயமான்ன கடந்த 2007ம் ஆண்டு ஓய்வு பெற்றதோடு, லசந்த கொலை செய்யப்பட்டது 2009ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி ஆகும்.

மேலும், 12 வருடங்கள் மட்டுமே சேவையில் இருந்த அவருக்கு சேவைக் காலத்தை பூர்த்தி செய்யாததால், ஓய்வூதியம் கிடைக்கப் பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது.

அத்துடன், இந்தக் கொலை வழக்கு தொடர்பிலான சந்தேகநபர்களின் வரையப்பட்ட படங்கள் கடந்த காலங்களில் ஊடகங்களில் வௌியிடப்பட்டன.

மேலே உயிரிழந்த இராணுவ அதிகாரி மற்றும் வரையப்பட்ட சந்தேகநபரின் படமும் மேலே தரப்பட்டுள்ளது.

ideal-image

Share This Post

Post Comment