தனுசு ராசிக்கான குருப் பெயர்ச்சி பலன்கள் (02.08.2016) முதல் (01.09.2017) வரை

தனுசு

மூலம் 68% பூராடம் 72% உத்திராடம் 1ம் பாதம் 77%

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருந்து புதிய அனுபவங்களை கற்றுத் தந்து உங்களின் இலக்கை நோக்கி முன்னேற வைத்த குருபகவான் 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் thanusuநுழைவதால் உத்யோகம், பதவி, கவுரவத்திற்கு பங்கம் வருமே என்றெல்லாம் கலங்க வேண்டாம்! ஓரளவு நன்மையே உண்டாகும். வெளிநாட்டில் சிலருக்கு வேலை அமையும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை பார்க்க வேண்டி வரும். என்றாலும் குருபகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். புது வேலை அமையும். திடீரென்று அறிமுகமாகும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டை பார்ப்பதால் தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடனான மோதல்களும் விலகும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வழக்கு சாதகமாகும். வீடு மாறுவீர்கள். இடமாற்றம் உண்டு. குருபகவான் 6-ம் வீட்டை பார்ப்பதால் பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். கவுரவப் பதவி தேடி வரும். ஆனால் குருபகவான் 10-ம் வீட்டில் தொடர்வதால் சில சமயங்களில் எடுத்த வேலைகளை முழுமையாக முடிக்க முடியாமல் மனஇறுக்கத்திற்கு ஆளாவீர்கள். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம்.

வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். கணவன்- மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். சிலர் மனைவி, பிள்ளைகளை விட்டுப் பிரிந்து அயல்நாடு, வேற்றுமாநிலம் சென்று வேலைப் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் திடீர் அதிர்ஷ்ட, யோகம் உண்டா கும். உத்யோகத்தில் உயர்வு உண்டு. தந்தை பக்கபலமாக இருப்பார். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். திருமணம், சீமந்தம், காதுகுத்து என்று வீடு களை கட்டும்.

தந்தைவழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் அட்டமாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். அவ்வப்போது அடிவயிற்றில் வலி, இரத்த சோகை, கண் வலி வந்துப் போகும். செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக முடிப்பீர்கள். சொத்தை சீர் செய்வீர்கள். எதிர்பாராத பயணங்கள் உண்டு. உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 11-ம் வீட்டில் குரு அமர்வதால் எங்குச் சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். மகனின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். கூடாப்பழக்கங்கள் தொற்ற வாய்ப்பிருக்கிறது.

வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்கள் திடிரென்று பணியை விட்டு விலகுவார்கள். வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டு கடையை இடமாற்றம் செய்வீர்கள். பங்குதாரர்கள் கொஞ்சம் ஏடாகூடமாக பேசுவார்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். உங்களுடைய உழைப்பை பயன்படுத்தி வேறு சிலர் நல்ல பெயரெடுத்து முன்னேறுவார்கள். அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

இந்த குருமாற்றம் பணத்தின் அருமையை அறிய வைப்பதாகவும், சகிப்புத் தன்மையும், பொறுமையும் அவசியம் என்பதை உணர்த்துவதாகவும் அமையும்.

இதையும் படியுங்கள்…

Share This Post

Post Comment