தண்ணீர் பற்றாக்குறையை போக்க 190 கிணறுகளை தூர்வாரிய பெண்கள்

sdsd

kerala-4._L_styvpfகேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் வடபகுதியில் அமைந்துள்ளது பூக்கொட்டுகாவு கிராமம். கடந்த ஆண்டு இப்பகுதியில் போதிய மழை பொய்த்துப் போனதால் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்.

இதற்கிடையே, வரும் ஆண்டுகளில் இதுபோல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க என்ன செய்வது? என பஞ்சாயத்து சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிணறுகளை தூர்வாரி முறையாக பயன்படுத்தி வந்தாலே, தண்ணீர் பற்றாக்குறையை போக்கி விடலாம் என பலரும் கருத்து தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து, பஞ்சாயத்து உறுப்பினர்களின் உதவியுடன், மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டம் சார்பில் கிணறுகளை தூர்வாரும் பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டன.

kerala-3._L_styvpfகிணறு தூர்வாரும் பணிகளில் ஆண்களுக்கு ஈடாக பெண்களும் ஈடுபட்டு வந்தனர். ஆனால், சில நாட்களிலேயே பெண்களின் உறவினர்கள், ’இது உங்களுக்கு சரிப்படாது. எனவே நீங்கள் வேறு வேலை பார்க்கச் செல்லலாம்’ என தெரிவித்தனர்.

’தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவது நாம் தானே’ என எண்ணிய பெண்கள், கிணறு தூர்வாரும் பணியில் கூலி வாங்காமல் தொடர்ந்து ஈடுபட ஆரம்பித்தனர். இதுவரை 190 கிணறுகளுக்கு மேல் தூர்வாரி சாதனை படைத்துள்ளனர்.

இதுகுறித்து பூக்கொட்டுக்காவு கிராமத்தை சேர்ந்த லட்சுமி கூறுகையில், ’’கிணற்றை தூர்வாருவது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. சில நாள்களில் கிடைத்த பயிற்சியை கொண்டு நாங்கள் இதை தொடர்ந்து செய்து வருகிறோம்.

women-dig-wells-to-make-village-self-sufficient-in-waterபல பெண்களையும் இதில் ஈடுபடுத்தி வருகிறோம். எனது குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். முதலில் எங்களுக்கு ஒரு நாள் கூலியாக 240 ரூபாய் தந்தனர். ஆனால் கடந்த 7 மாதமாக ஒரு பைசா கூட வாங்காமல் உள்ளூர் தண்ணீர் பற்றாக்குறையை போக்கவே இதை செய்து வருகிறோம். நிலுவை தொகையை தந்து விடுவார்கள் என நம்புகிறேன். இனி தண்ணீர் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை’’ என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பஞ்சாயத்து தலைவர் ஜெயதேவன் கூறுகையில்,’’தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க பெண்களே களம் இறங்கியது மகிழ்ச்சியாக உள்ளது. முதலில் தன்னார்வலர்களாக செய்தாலும் பின்னர் அவர்கள் வேறு வேலைக்கு சென்று விடுவார்கள் என்றே நினைத்தேன். ஆனால், அவர்கள் தொடர்ந்து கிணறுகளை தூர்வாரினர். அவர்களின் மன உறுதியை கண்டு ஆச்சரியப்பட்டு போனேன். இவர்களுக்கான நிலுவை தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

தண்ணீர் பற்றாக்குறையை போக்கியது மட்டுமின்றி, ஆண்களுக்கு இணையாக கிணறுகளை தூர்வார முடியும் என நிரூபித்த பூக்கொட்டுகாவு கிராம பெண்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Share This Post

Post Comment