சீனாவை திரும்பி பார்க்க வைத்த `தங்கல்’ படக்குழுவின் அடுத்த திட்டம்

ekuruvi-aiya8-X3

Dangal-Team-plans-to-release-the-film-in-Hong-Kongநித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர் கான் நடித்து வெளிவந்த படம் ‘தங்கல்’. கடந்த டிசம்பர் மாதம் வெளியான இப்படம் சீனா தவிர்த்து உலகம் முழுவதும் ரூ. 723 கோடியை வசூல் செய்திருந்தது. இந்திய மக்களால் விரும்பி பார்க்கப்பட்ட இப்படம். இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் சேர்த்து ரூ.512 கோடியை வசூல் செய்திருந்தது.

இதையடுத்து, டப் செய்யப்பட்டு கடந்த மாதம் சீனா மற்றும் தைவானில் வெளியானது. சீனாவில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் சீனாவில் மட்டும் ரூ.1100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. மொத்தமாக உலகம் முழுவதும் ரூ.1823 கோடியை வசூல் செய்திருக்கிறது.

இதற்கு முன்பு சீனாவில் திரையிடப்பட்ட அனைத்து இந்திய படங்களின் சாதனைகளையும் தங்கல் முறியடித்துள்ளது. சீனாவில் வெளியான ஹாலிவுட் அல்லாத படங்களில் ‘தங்கல்’ முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

`தங்கல்’ படத்திற்கு சீனாவில் கிடைத்த வரவேற்பை அடுத்து, ஹாங் காங் நாட்டிலும் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 

Share This Post

Post Comment