சாமியார் குர்மீத் ராம் ரஹீம்-க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

ekuruvi-aiya8-X3

Gurmeet-Ram-Rahimபாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சாமியார் குர்மீத் ராம்ரஹீமிற்கு  10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அரியானா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக ராம்ரஹீம் அடைக்கப்பட்டுள்ள ரோடக் சிறையிலேயே நீதிமன்றம் அமைத்து நீதிபதி மேற்கண்ட  தீர்ப்பை வழங்கியுள்ளார். முன்னதாக வழக்கு தொடர்பான வாதத்தின் போது ராம் ரஹீமுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குமாறு சி.பி.ஐ தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் வயதை காரணம் காட்டி தண்டனையை குறைந்து வழங்குமாறு சாமியார் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.விசாரணையின் போது தம்மை மன்னித்து கருணை காட்டுமாறு ராம் ரஹீம் கண்ணீர் விட்டு கதறியதாக தகவல் வெளியானது. தீர்ப்பு வாசிக்கப்படும் செய்தி வெளியானதற்கே அரியானாவில் கலவரம் துவங்கி விட்டது. ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் 2 கார்களை எரித்து வன்முறை வெறியாட்டத்தை துவக்கியுள்ளனர். இதனால் இன்று எங்கெங்கே கலவர பூமியாக மாறுமோ என்ற பீதியில் வடமாநில மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Share This Post

Post Comment